• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • வருவாய்த் துறை பணியிடங்கள் பறிபோகும் அவலம் பணியிடங்களை பாதுகாத்திட பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த் துறை பணியிடங்கள் பறிபோகும் அவலம் பணியிடங்களை பாதுகாத்திட பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம்

கார்மேகம்

UPDATED: Nov 25, 2024, 11:11:57 AM

இராமநாதபுரம் மாவட்டம்

கீழக்கரையில் வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் வெளியே ஆலோசணைக் கூட்டம் நடந்தது

அக் கூட்டத்தில் வரும் 26- ந் தேதி முதல் வருவாய்த் துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் கீழ் கண்ட  கோரிக்கைகள் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்

கோரிக்கைகள்

இளநிலை/முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும்

மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுலக உதவியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும் 

முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையர் உடன் அறிவிப்பு வெளியிட வேண்டும்

கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பினை 5%சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து 25/ சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

 

VIDEOS

Recommended