- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 300 கிமீ பயணம் செய்து சிறப்பு மருத்துவரை சந்திக்க சென்ற இதய நோயாளியிடம் அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம்.
300 கிமீ பயணம் செய்து சிறப்பு மருத்துவரை சந்திக்க சென்ற இதய நோயாளியிடம் அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம்.
செ.சீனிவாசன்
UPDATED: Aug 20, 2024, 6:24:26 AM
நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாடு பகுதியை சேர்ந்த மூத்த குடிமகன் பாபுஜி இவர் இதய நோயாளி அவர் 3ம் மருத்துவர் கருத்தரைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு இருதய நோய் மருத்துவ நிபுணர் ஓமன் ஜார்ஜியிடம் ஆலோசனை பெறுவதற்காக ரூ 870 செலுத்தி 25.10.2023 அன்று சந்திக்க முன்னேற்பாடு பெற்றிருந்தார்.
அன்று பாபுஜி சிறப்பு மருத்துவரை சந்திக்க சென்ற போது மருத்துவர் அங்கு இல்லை நீண்ட நேரத்திற்கு பிறகு பயிற்சி மருத்துவர் மூத்த குடிமகனை பரிசோதனை செய்து மருத்துவமனை பேக்கேஜ் எடுக்க உத்தரவிட்டார் அதனைத் தொடர்ந்து 2,295 ரூபாய் செலுத்தி எக்கோ மற்றும் இசிஜி எடுக்கப்பட்டது.
தொடர்ந்து அதற்கான அறிக்கையை மூத்த குடிமகன் கேட்ட போது மூன்று நாட்களுக்குப் பிறகு வழங்கப்படும் என மருத்துவ நிர்வாகம் சார்பில் அலட்சியமாக தெரிவிக்கப்பட்டது
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மூத்த குடிமகன் தான் 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வருகை புரிந்துள்ளதாகவும் சிறப்பு மருத்துவர் சந்திப்பதற்கு அனுமதி பெற்று வந்ததாகவும் மருத்துவரையும் சந்திக்க விடவில்லை
ஏற்கனவே அனைத்து பரிசோதனையும் முடித்த என்னை மீண்டும் பரிசோதனை செய்ய சொன்னீர்கள் அதற்கான தொகையும் செலுத்துள்ளேன் ஆனால் அறிக்கையை செலுத்த மறுக்கிறீர்கள் என ஆத்திரமடைந்த மூத்த குடிமகன் சேவை குறைபாடு உள்ளதாக நாகப்பட்டினம் நுகர்வோர் நீதிமன்றத்தில் 17.11.2023 வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி மூத்த குடிமகன் பாபுஜிக்கு சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சல் வீண் அலைச்சல் ஏற்படுத்தியதற்காக சிஎம்சி மருத்துவமனை ஒரு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் மேலும் வழக்கு செலவு தொகையாக 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் வழக்கு கோப்பிற்கு எடுக்கப்பட்ட நாள் முதல் ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டி கணக்கிட்டு முழு தொகையின் செலுத்த வேண்டும் என நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளது.
சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட வேலூர் சிஎம்சி மருத்துவமனை பணம் தான் முக்கியம் என்ற நோக்கமாக மாறிவிட்டதாகவும் தமிழ்நாட்டில் இயங்கும் மருத்துவமனையில் தமிழர்களை தவிர அனைத்து மொழி பேசுபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த குடிமகன் கோரிக்கை வைத்துள்ளார்.