படப்பை ஊராட்சியில்  மலைபோல் தேங்கி நிற்கும் குப்பைகள். சுகாதார கேடு ஏற்படும் அபாயம். 

லட்சுமி காந்த்

UPDATED: Jun 20, 2024, 8:14:53 PM

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட படப்பை ஊராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 4,000 கிலோ குப்பை சேகரமாவதால் படப்பை ஊராட்சியில் குப்பை அகற்றுவது பெரும் பிரச்னையாக இருந்து வந்தது.

 படப்பை ஊராட்சியில் கடந்த 2022 ம் ஆண்டு காந்த வெப்ப சிதைவு இயந்திரம் எனும் குப்பைகள் மறுசுழற்சி செய்யும் கூடத்தை 61 லட்சம் ரூபாய் மதிப்பில், ஓரகடத்தில் உள்ள ரெனால்டு நிசான் கார் தொழிற்சாலையின் சிஎஸ்ஆர் நிதி வாயிலாக அமைத்து கொடுத்தது.

இந்த இயந்திரம் எண்ணெய், டீசல், மின்சாரம், நிலக்கரி ஆகிய எரிபொருள் இல்லாமல், "காந்த சக்தி" வாயிலாக ஏற்படும் வெப்பத்தால் குப்பையை சாம்பலாக்கும். 

இந்த இயந்திரத்தில் 200 கிலோ குப்பையை உள்ளீடு செய்தால், 1 கிலோ சாம்பல் கழிவுகள் மட்டும் வெளிவரும். தினம் 5 டன் குப்பை வரை இந்த இயந்திரத்தில் அழிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.

இதனால், குப்பை அகற்றும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த காந்த வெப்ப சிதைவு கூடம் பயன்படுத்தப்படாமல் மூடியே கிடக்கிறது.

படப்பை ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, இந்த கூடத்தின் முன் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரும் , ஒன்று குழு தலைவரும், வட்டார வளர்ச்சி அலுவலர்களும், பணம் சம்பாதிப்பதில் தான் குறியாக உள்ளார்களே தவிர, மக்களுக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை சுகாதாரத்தை கூட கொடுப்பதில், "சற்று கூட அக்கறை செலுத்தவில்லை" என பொதுமக்கள் புலம்புகின்றார்கள்.

காந்த வெப்ப சிதைவு இயந்திர கூடத்தை திறந்து குப்பையை முறையாக அழிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்."

 

VIDEOS

Recommended