• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காமயகவுண்டன் பட்டி பேரூராட்சி அலுவலகத்தை டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் குடும்பத்தினருடன் முற்றுகை.

காமயகவுண்டன் பட்டி பேரூராட்சி அலுவலகத்தை டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் குடும்பத்தினருடன் முற்றுகை.

ராஜா

UPDATED: Aug 2, 2024, 2:02:35 PM

தேனி மாவட்டம் கம்பம்

அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஊரக உள்ளாச்சித் துறை சங்கம் சார்பில் ஊர்வலமாக வந்து முற்றுகை போராட்டம் குடும்பத்தினருடன் நடைபெற்றது.

கடந்த 13 வருடங்களாக பணியாற்றி வந்த டெங்கு ஒழிப்பு மஸ்த்தூர் பணியாளர்களை பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக வேலை இல்லை என்று அலக்களிப்பதாக புகார்.

இந்த டெங்கு ஒழிப்பில் கடந்த 13 வருடங்களாக பணியில் இருந்த 20 பணியாளர்களில் 12 பேரை மட்டும் வேலையிலிருந்து நீக்கியதற்கான காரணம் கூற பேரூராட்சி நிர்வாகம் மறுக்கிறது.

Latest Theni District News

இதில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் மனு கொடுத்தும் எந்த பின்பலனும் இல்லை என்று மனவேதனையில் தெரிவிக்கின்றனர்.

இதனால் இன்று காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை டெங்கு மஸ்துர் பணியாளர்கள் குடும்பத்தினருடன் ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பினர்.

பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து எங்களை அலைக்கழிப்பு செய்தும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கி வருகின்றனர்.

News

தொடர்ந்து நாங்கள் அமைதி வழியில் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றோம் மாவட்டம் சார்பில் எங்களுக்கு எந்தவித பலனும் கிடைக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த முற்றுகை போராட்டத்தில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இச்சம்பவத்தால் காமகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

 

VIDEOS

Recommended