- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நீலகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி பழுதால் பரபரப்பு.
நீலகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி பழுதால் பரபரப்பு.
அச்சுதன்
UPDATED: Apr 28, 2024, 8:07:51 PM
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பதிவுகள் நிறைவடைந்து மொத்தமாக 70.93 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் வாக்குப்பெட்டிகளை துணை ராணுவம் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 20 ம் தேதி தேர்தல் பார்வையாளர்கள், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மு.அருணா மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் பாதுகாப்பு அறைகளில் வைத்து சீலிடப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதனை கண்காணிக்க 163 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு வைத்திருக்கும் அறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி சுற்றுவட்டாரம் என அனைத்து இடங்களும் கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று திடீரென கட்சி முகவர்கள் அமரும் அறையில் கண்காணிப்பு கேமிரா பதிவுகளை காணக்கூடிய காட்சித் திரை ( Tv screen) தொழில்நுட்ப கோளாறு காரணமாக காண்சியளிக்காததால் கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது.
உடனே மாவட்ட நிர்வாகம் மூலம் தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு எந்த காரணத்தினால் இந்த கோளாறு ஏற்ப்பட்டு உள்ளது என ஆய்வு மேற்க் கொண்டு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காட்சிகள் பதிவாகக்கூடிய பெட்டி சூடான காரணத்தினால் இந்த கோளாறு ஏற்ப்பட்டுள்ளது எனவும்,
அந்த தொழில்நுட்ப கோளாறு உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்களால் சுமார் 20 நிமிடத்தில் சரிசெய்யப்பட்டு மீண்டும் அந்த TV SCREEN காட்சி திரைகள் செய்லபட தொடங்கின.
குறிப்பாக திரைகள் மட்டுமே தெரியாமல் ஆனது, ஆனால் கண்காணிப்பு பதிவுகள் அனைத்துமே பதிவாகி உள்ளது என அதிகார பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளன.