• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காவிரி ஆற்றுப்பாலத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாசகங்கள் - ஆட்சியர் திறந்து வைத்தார்.

காவிரி ஆற்றுப்பாலத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாசகங்கள் - ஆட்சியர் திறந்து வைத்தார்.

JK 

UPDATED: Apr 15, 2024, 8:29:13 AM

தமிழகம் முழுவதும் வருகிற 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட் டம், விழிப்புணர்வு பேரணி, ரங்கோலி கோலம் வரை தல், ராட்சத பலூன்களை வானில் பறக்கவிட்டு விழிப் புணர்வு ஏற்படுத்துதல்,

தானியங்கள் மற்றும் நறுமண பயிர்களில் விழிப்பு ணர்வு இலட்சினை அமைத்தல், பழங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் செதுக்குதல், மணல் சிற்பம் அமைத்தல் உள்ளிட்ட பல் வேறு விழிப்புணர்வு நிகழ்ச் சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக திருச்சி காவிரி ஆற்றுப்பா லத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரமாண்ட அளவில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம் மற்றும் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் மாநகராட்சி கமிஷனர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலெட்சுமி, அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

Recommended