• முகப்பு
  • குற்றம்
  • பெரியகுளம் தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் நிபந்தன் பொதுமக்களிடம் ஜாதியைச் சொல்லி இழிவுபடுத்தி கொலை மிரட்டல்.

பெரியகுளம் தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் நிபந்தன் பொதுமக்களிடம் ஜாதியைச் சொல்லி இழிவுபடுத்தி கொலை மிரட்டல்.

ராஜா

UPDATED: Jun 12, 2024, 11:32:36 AM

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சீப்பர் காலனி பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன் இவர் வசிக்கும் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிமெண்ட் சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்ற போது 

குடிதண்ணீர் குழாய் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை கண்டு தேவதானப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்க சென்ற போது அலுவலகத்தில் இருந்த திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் நிபந்தன் ஏண்டா உங்களுக்கெல்லாம் குழாய் போடவா நாங்க இருக்கோம் என்று கூறி தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்ற ஒரவஞ்சக கண்ணோட்டத்தில் ஒருமையில் ஆபாசமாக பேசி உங்களையெல்லாம் கொன்று விடுவேன் என்றும்

நீங்கள் குடியிருக்கும் பகுதியை புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கி விடுவேன் என்று கூறி இழிவுபடுத்தி பேசியதாகவும் பாதிக்கப்பட்ட அறிவழகன் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் பேரூராட்சி துணைத் தலைவர் நிபந்தன் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் பேரூராட்சி துணைத் தலைவரை விசாரணைக்கு அழைத்த போது அவர் தேவதானப்பட்டியில் இருந்து தலைமறைவாய் உள்ளார் இதனால் காவல்துறையினர் பேரூராட்சி துணைத் தலைவர் நிபந்தனை தேடி வருகின்றனர்.

மேலும் பொதுமக்களுக்கு சேவை செய்யவே தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு அப்பகுதி மக்கள் அளித்த வாக்கில் வெற்றி பெற்று பதவி வைத்து வரும் துணைத்தலைவர் நிபந்தன் பொதுமக்களுக்கு பணியாற்றாமல் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யாமல் குடிதண்ணீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யக்கோரி சீப்பர் காலனி மக்கள் புகார் மனு அளிக்க வந்தபோது அவர்களை தரைக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரியகுளம் தேவதானப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில் இதுபோன்று பொதுமக்களிடம் ஏற்றத்தாழ்வாக ஓரவஞ்சகத்துடன் நடந்து கொள்ளும் துணைத் தலைவர் நிபந்தன் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்து உரிய விசாரணை நடத்திட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended