ஸ்ரீமுஷ்ணம் நகரப்பாடி கிராமத்தில் ஆறு நபர்கள் மீது கொலவெறி தாக்குதல்.
சண்முகம்
UPDATED: Apr 23, 2024, 3:14:53 PM
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நகரப்பாடி கிராமத்தில் ராஜேந்திரன் மகன் இளையராஜா, பாக்யராஜ், லட்சுமி ஆகிய மூவரும் நேற்று மாலை 4 மணி அளவில் இதே ஊரைச் சேர்ந்த அமிர்தலிங்கம், வைரமுத்து, இளங்கோவன், ராஜவேல், செந்தமிழ் செல்வி, செந்தாமரை இவர்களை இரும்பு பைப் மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர் .
இதில் சுமார் ஆறு பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, தகவல் அறிந்த போலீசார் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஏற்கனவே இந்த ஆறு நபர் மற்றும் இளையராஜா, பாக்யராஜ், லட்சுமி இவர்களுக்கு இடம் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் ஆய்வாளர் ராபின்சன் தேர்தல் முடிந்த பின் இரு இரு தரப்பினரிடம் சமாதானம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளனர்
ஆனால் போலீசாரின் பேச்சை கேட்காமல் ஆத்திரமடைந்த மூன்று நபர்கள் இவர்களை பலமாக தாக்கியுள்ளனர்.