• முகப்பு
  • குற்றம்
  • பூந்தமல்லி அருகே வாகனத்தில் எடுத்து வந்த ஒரு டன் குட்கா பறிமுதல்.

பூந்தமல்லி அருகே வாகனத்தில் எடுத்து வந்த ஒரு டன் குட்கா பறிமுதல்.

S.முருகன்

UPDATED: Jun 12, 2024, 11:49:14 AM

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை நசரத்பேட்டையில் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்ய போலீசார் மடக்கியபோது போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றது சந்தேகமடைந்த போக்குவரத்து போலீசார் அந்த வாகனத்தை விரட்டி சென்ற நிலையில் நிற்காமல் சென்ற வாகனம் நசரத்பேட்டை சிக்னலில் நின்ற இரண்டு வாகனங்களை இடித்துவிட்டு நின்றது.

போலீசார் பின்னால் வருவதை கண்டதும் வாகனத்தை ஓட்டி வந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். சந்தேகத்தின் பேரில் போலீசார் வாகனத்தை திறந்து பார்த்த போது அதில் ஒரு டன் குட்கா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த போலீசாரிடம் குட்கா பிடிபட்ட வாகனத்தை ஒப்படைத்தனர். 

மேலும் குட்காவை கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended