• முகப்பு
  • இலங்கை
  • சிறி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் பெருந்தோட்ட தொ ழிலாளர்களின் சம்பளம் 1700 கிடைக்க வேண்டி தேங்காய் உடைத்து பூசை

சிறி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் பெருந்தோட்ட தொ ழிலாளர்களின் சம்பளம் 1700 கிடைக்க வேண்டி தேங்காய் உடைத்து பூசை

ராமு தனராஜா

UPDATED: Apr 28, 2024, 7:55:17 AM

ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் இன்றைய தினம் பசறை சிறி கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் பெருந்தோட்ட தோழிலாளர்களின் சம்பளம் 1700 கிடைக்க வேண்டும் என வேண்டி குறித்த ஆலயத்தில் தேங்காய் உடைத்து பூசை செய்ததன் பின்னர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிற்கான காரணம் என்னவென்றால், மக்களுக்காக கோரப்பட்ட ஊதியம் இன்னும் கிடைக்கபடவில்லை.

ஏப்ரல் 14 என்று கூறினார்கள்.அதற்கு பிறகு போராட்டம் செய்வோம் என்று கூறினார்கள். போராட்டம் செய்கையில் அதாவது ஒரு அணியில் கெப்டன் மட்டும் உப கெப்டன் இல்லாமல் அணியை வழி நடத்துவது போல போராட்டத்திற்கு அந்த கட்சியின் தலைவரும் வரவில்லை அந்த கட்சியின் பொது செயலாளரும் வரவில்லை. அதன் பிறகு பல விடயங்கள் கூறினார்கள். 24 ற்கு பிறகு போராட்டம் வெடிக்கும் என்றார்கள். பட்டாசு கூட வெடிக்கவில்லை.



அதுமட்டுமின்றி ஒரு தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சொன்னார் 1 ம் திகதிக்கு முன் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் கிடைக்கா விட்டால் 2 ம் திகதி சகல பதவிகளில் இருந்தும்

தான் பதவி விலகுவேன் என்று. இவ்வாறு எம் மக்களுக்கு பொய் கூறி ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். அதனால் நாம் கடைசி வழியாக நாம் கடவுளை தான் நாடுகிறோம்.எங்கு வேண்டும் என்றாலும் பொய் கூறலாம் இறைவனுக்கு பொய் கூறி முடியாது. ஆகவே நாம் கடவுளை நாடி வந்துள்ளோம். 

இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கைக்காக 245000 ஏக்கர்கள் உள்ளன. தோட்ட தொழிலாளர்கள் என்று பார்த்தால் 185000 பேர் உள்ளார்கள். இந்த காணிகள் எல்லாம் அரசாங்கத்திற்கு சொந்தமான காணி கம்பெனிகள் இக்காணிகளை குத்தகைக்கு எடுத்து மக்களுக்கு வேலை கொடுக்கின்றன. நாம் வந்ததன் பின்னர் எமது முழு முயற்சியாக ஒவ்வொருவருக்கும் ஒரு ஏக்கர் என்ற விதத்தில் கொடுப்பதற்கு முயற்சிகளை எடுத்து வருகின்றோம்.

அந்த ஒரு ஏக்கரை கொடுத்ததற்கு பிறகு தோட்ட தொழிலாளர்களை தோட்ட விவசாயிகள் என்ற பெயரையே நாம் பெறுவோம். அரசாங்கத்தின் கீழ் பார்த்தால் 33 வருடங்களுக்கு தான் கம்பனிகளுக்கு குத்தகைக்கு கொடுக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்த 1700 ரூபாய் பிரச்சினையையும் செய்து கொடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கையின் படி ஒப்பந்தகளை நீக்கி மக்களுக்கு குத்தகைக்கு கொடுப்பதற்கான வழிமுறைகளை நாம் கட்டாயம் செய்வோம்.


கெபினட் அமைச்சர்கள் தோட்ட சங்கத்தின் அங்கத்தவர்களை வரவழைத்து பேச வேண்டும் ஆனால் அவர்கள் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

 

  • 1

VIDEOS

Recommended