• முகப்பு
  • இலங்கை
  • கண்டி மாவட்டத்தில் குறைவருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 20 கிலோ இலவச அரிசி  விநியோகம்

கண்டி மாவட்டத்தில் குறைவருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 20 கிலோ இலவச அரிசி  விநியோகம்

ஜே.எம். ஹாபீஸ்)

UPDATED: Apr 23, 2024, 5:50:06 AM

குறை வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் காரியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வு ஒன்று இடம் பெற்றது.

 ஜனாதிபதியின் மேற்படி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் பிரிவில் 12 000 பேர் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். 

கண்டி மாவட்டப் பாரானுமன்ற உறுப்பினர் குனதிலக ராஜபக்ச தலைமையில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் மொகான் தர்மதாச உற்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான வழிகாட்டல்களை கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் மேற்கொண்டிருந்தார். 

கண்டி மாவட்டத்தில் மொத்தமாக குறைவருமானம் கொண்டவர்களாக இரண்டு இலட்சத்து ஆயிரத்து இருபத்து ஜந்து குடும்பங்கள் இனம் காணப்பட்டிருந்தனர். இதில் குண்டசாலைத் தொகுதியில் அதிகூடியர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தொகை 16222 ஆகும். 

கக் குறைந்தவர்கள் கலகெதர பிரதேச செயலாளர் பிரிவில் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தொகை 4898 ஆகும்.

 

  • 2

VIDEOS

Recommended