• முகப்பு
  • ஆன்மீகம்
  • தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா தெப்போற்சவம்.

தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழா தெப்போற்சவம்.

செந்தில் முருகன்

UPDATED: Apr 26, 2024, 6:28:06 AM

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற உலக புகழ்பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

மார்க்கண்டேயனுக்காக சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் இத்தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

இக்கோவிலில் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி, அம்பாளை வழிப்பட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் 14 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் முக்கிய விழாக்களில் ஒன்றான தெப்போற்சவம் இன்று நடைபெற்றது.

இதையொட்டி மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளினார்.

மகா தீபாராதனையுடன் கோவில் தீர்த்த குளத்தில் 5 சுற்றுக்கள் நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 

VIDEOS

Recommended