• முகப்பு
  • அரசியல்
  • பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் எடப்பாடி 70 வது பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு  தங்கத்தேர் பவனி.

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் எடப்பாடி 70 வது பிறந்தநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு  தங்கத்தேர் பவனி.

லட்சுமி காந்த்

UPDATED: May 10, 2024, 7:39:13 PM

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உலகமெங்கும் உள்ள கழகத்தினர் அவருடைய பிறந்த நாளை 12.05.2024 அன்று சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் ஆலயத்தில் எடப்பாடியார் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு, கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் அவர்கள் தலைமையில், காமாட்சி அம்மனுக்கு சிவப்பு நிற பட்டு உடுத்தி, வைர வைடூரிய ஆபரணங்கள் அணிவித்து, மல்லிகை பூ மாலையும் சூட்டி லட்சுமி,சரஸ்வதி, தேவியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கோவிலின் உள் பிரகாரத்தில் அம்மன் தங்க தேரில் பவனி வந்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி வேட்பாளர் இ.ராஜசேகர் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு, எடப்பாடியார் அவர்கள் பல்லாண்டு வாழ்க என கோஷமிட்டவாறு தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தார்கள்.

காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் புளியோதரை சாதம், எலுமிச்சை சாதம், பொங்கல் ,கேசரி, உள்ளிட்ட அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக மகளிர்களுக்கு சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

VIDEOS

Recommended