இன்றைய முக்கிய செய்திகள் 1.5.2022

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கிருஷ்ணகிரி : ஒசூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் இளைஞர் சதீஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி பைக் தீயை அணைத்தனர். இருப்பினும் பைக்கானது தீயில் எரிந்து முற்றியும் சேதமானது. திண்டுக்கல் : கொடைக்கானலில் வாரவிடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சென்னை : பெரவள்ளூரில் பிரபல ஓட்டலில் வழங்கப்பட்ட கேசரியில் வண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருமங்கலம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தசரதராமன் (29). இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். இவர் தனது நண்பர்கள் 8 பேருடன் பெரவள்ளூர் சிவஇளங்கோ சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் கேசரி ஆர்டர் செய்துள்ளார். அதை ஊழியர் கொண்டு வந்து கொடுத்தபோது அதில் வண்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஓட்டலில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை : ஆனைமலை அருகே சிறுவனின் உடலில் 10 இடங்களில் சூடு வைத்த தாய் குறித்து குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புதுச்சேரி : மேட்டுபாளையத்தில் பியூட்டி பார்லர் பெண் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி, நூதன முறையில் தங்க நகையை திருடி சென்ற வழக்கில், சிசிடிவி காட்சி அடிப்படையில் தைசி என்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தருமபுரி : அருகே போதை ஊசிகளை பதுக்கி விற்பனை செய்துவந்த இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைதுசெய்தனர். காஞ்சிபுரத்தில் : 111 டிகிரி வெயில் கொளுத்தியது , மக்கள் தவிப்பு. இராமநாதபுரம் : பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்ட ஒலி,ஒளிக்காட்சி சோதனையோடு நிறுத்தப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை ஏமாற்றமடையச் செய்துள்ளது. தூத்துக்குடி : அருகே தாளமுத்து நகர் கடற்பகுதியில் திடீர் கடல் சீற்றம் காரணமாக சுமார் 100 அடி தூரத்திற்கு உட்புகுந்த கடல்நீரால் பரபரப்பு. பலத்த காற்றாடித்தால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையும் சூழல் உள்ளதால் அச்சம். திண்டுக்கல் : ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமிலிருந்து முதல் முறையாக கும்கி யானை சின்னதம்பி ஊருக்குள் புகும் காட்டு யானைகளை விரட்ட திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அரியலூர் : சுற்றுலா தலமான ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆசியாவிலேயே உயரமான 53 அடி உயரத்திலான வெண்கல மாதா சுரூபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,madurai latest news,Ariyalur todays news,Krishnagiri latest news tamil,dindigul news today,tuticorin news tamil,Ramnathapuram todays news live,Kanchipuram news today,Dharmapuri news today tamil,pondichery flash news,Coimbatore news today tamil,

VIDEOS

RELATED NEWS

Recommended