தக்காளி வைரஸ் தமிழகத்தில் பரவுகிறதா ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் மகாமக கலையரங்கில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க 6வது மாநில மாநாடு அகில இந்திய துணை தலைவர் ஆர் இந்திரா தலைமையிலும், மாநில செயலாளர் ஜெ வசந்தா முன்னிலையிலும் நடைபெற்றது, இதில் இன்று மாலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், அப்போது, திமுக அரசு பொறுப்பேற்கும் முன்புள்ள 4 மாதங்களில் போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 63 லட்சமாக இருந்தது, திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், இதனை ஒரு இயக்கமாக நடத்தியதன் பயனாகவும், 28 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தியதன் விளைவாகவும், கடந்த 7 மாதங்களில் மட்டும் 11 கோடியே 7 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தமிழக மக்களுக்கு 88 சதவீதமாக அதிகரித்துள்ளது, இதனால் தான் அண்டை மாநிலங்களிலான கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், டெல்லி, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, யுகே, யுஎஸ்ஏ தென் கொரியா போன்ற வெளி நாடுகளிலும் தற்போது தொற்று பரவல் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அதிகரித்த போதும், தமிழகத்தில் இதன் எண்ணிக்கை 50க்கும் குறைவாகவே உள்ளது . மேலும் கடந்த 2 மாதங்களாக தொற்றால் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும், தமிழகத்தில் தொற்றா நோய்கள் காரணமான ஆண்டு தோறும் 5 முதல் 6 லட்சம் உயிரிழப்புகள் நேர்கிறது, தற்போது தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 88 சதவீதமாக அதிகரித்துள்ளதால், இன்னும் ஓர் இரு ஆண்டுகளில் இந்த உயிரிழப்பு சரிபாதியாக குறைய வாய்ப்புகள் அதிகம் என்றும், கிராம சுகாதார செவிலியர்களுக்காண, பணியிட மாறுதல் கலந்தாய்வு இவ்வாண்டும் ஜூன் மாதம் நடைபெறும் என்றும், இவ்வாண்டு மட்டுமல்லாது தொடர்ந்து எல்லா ஆண்டுகளும் இத்தகைய பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் திரு. மா சுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார் . இந்நிகழ்ச்சியில், அரசின் தலைமை கொறடா கோவி செழியன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு ப தமிழழகன், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் எஸ் கல்யாணசுந்தரம் உட்பட கிராம செவிலியர் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகளும், உறுப்பினர்களும் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடதக்கது நிகழ்ச்சியின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட, இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் படி, தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றி தருவோம் என்றும், தக்காளி வைரஸ் தமிழகத்தில் இல்லை, இருப்பினும் கேரளா மாநில எல்லை பகுதிகளான 13 இடங்களில் மாவட்ட சுகாதார அலுவலர்களின் தலைமையில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது . 3வது தவணையான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில், பொதுமக்களிடையே பெரிய அளவில் வரவேற்பில்லை எனவே, 18 வயதை கடந்த அனைவருக்கும், பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்கிட, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அனைத்து மாநில அரசுகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் மேலும் தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended