• முகப்பு
  • tamilnadu
  • அங்கிகாரம் இல்லாத மனைகளை வாங்காதீர், அதில் பிரச்சினை அதிகம்.

அங்கிகாரம் இல்லாத மனைகளை வாங்காதீர், அதில் பிரச்சினை அதிகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அரசு விதித்து உள்ள தடையை மீறி, தெருவின் பெயர் மற்றும் முகவரியை மாற்றி, அங்கீகாரமில்லாத மனைகளை சார் - பதிவாளர்கள் பதிவு செய்து, புதிய மோசடியில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. தமிழகத்தில், விவசாய நிலங்களை வீட்டு மனையாவதை தடுக்கக் கோரிய வழக்கால், அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனைக்கு, 2017 ல் தடை விதிக்கப் பட்டது. இதுதொடர்பான பத்திரங்களை பதிவு செய்யக் கூடாது என, சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை கடும் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. இருப்பினும், கூடுதல் தொகை லஞ்சமாக கிடைக்குமென்பதால், சில சார் - பதிவாளர்கள், சதுர அடி, சதுர மீட்டர் அளவுகளை தவிர்த்து, சென்ட், ஏக்கர் போன்ற அளவுகளை குறிப்பிட்டு, அங்கீகாரம் இல்லாத மனைகளின் விற்பனையை பதிவு செய்கின்றனர். நகரமைப்புத்துறை அங்கீகாரம், ரியல்எஸ்டேட் ஆணைய பதிவில்லாத மனைகளின் பத்திரங்களை பதிவுசெய்ய தடை விதிக்கப் பட்டு உள்ளது. இருப்பினும், சில சார் - பதிவாளர்கள், இந்த விதியை மீறுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது.... பொதுவாக ஒரு சொத்தை பதிவு செய்யும்போது, அதன் சர்வே எண் மற்றும் அமைவிட முகவரியை சரியாககுறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால், அங்கீகாரமில்லாத மனைகள் பதிவுசெய்வது தெரிந்து விடும். இதனால், சில சார் - பதிவாளர்கள், சொத்து அமைந்து உள்ள தெரு பெயரை தவறாக குறிப்பிட்டு, அங்கீகாரமில்லாத மனைகளை பதிவு செய்கின்றனர். இதில், சர்வே எண், கிராமத்தின் பெயர்கள் சரியாக இருக்கும். தெரு பெயரைமட்டும் மாற்றி குறிப்பிட்டிருப்பர். இதனால், அதை அங்கீகாரம் இல்லாத மனை என்று கண்டுபிடிக்க முடியாது. திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம் மண்டலங்களில், இது போன்ற புதிய மோசடிகள்நடப்பதாக புகார்கள் வந்து உள்ளன. வேலுார் மண்டலத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை பதிவுமாவட்டத்தில் மட்டும், 20 ஆயிரத்துக்கு மேற்பட்டபத்திரங்கள், இப்படி மோசடியாகபதிவாகி உள்ளன. இந்த விஷயத்தை, ஐ.ஜி., உள்ளிட்ட உயரதிகாரிகள் கவனத்துக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. விரைவில், இதில் சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும். செய்தியாளர் பா. கணேசன்

RELATED NEWS

Recommended