• முகப்பு
  • crime
  • சேலம் RRபிரியாணி கடையில் 3500 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்.

சேலம் RRபிரியாணி கடையில் 3500 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆர்ஆர்பிரியாணி உரிமையாளர் அளித்தப்புகாரின் அடிப் படையில் நடவடிக்கை. சென்னைகிண்டியில் உள்ள சேலம் ஆர்ஆர்பிரியாணி தயாரிக்கும் இடத்தில் உணவு பாது காப்புத் துறை அதிகாரிகள் மேற் கொண்ட அதிரடி ஆய்வில் 3500 கிலோ அளவிலானகெட்டுப்போன இறைச்சிகளை கைப்பற்றி உள்ளனர். ஆன்லைனில் ஆர்டர்செய்து கர்நாடகாமாநிலம் மாண்டியாவில் இருந்து வாங்கப் பட்ட இறைச்சிகள் தரமற்றதாக இருந்ததையடுத்து ஆர்ஆர்பிரியாணி உரிமையாளர் அளித்த புகாரின்அடிப்படையில், உணவு பாது காப்புத் துறை அதிகாரிகள் சோதனைமேற்கொண்டனர். சோதனையில் அதிகாரிகள் 3500 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாவட்டஉணவு பாது காப்புத்துறை அதிகாரி சதீஷ் கூறியதாவது... சேலம் ஆர்ஆர்உணவகம் அளித்தப்புகாரின் அடிப்படையில் இறைச்சிகள் அனைத்தையுமே கைப் பற்றி விட்டோம். கெட்டுப் போன இறைச்சிகுறித்து தெரிந்துக்கொள்ள கால்நடை மருத்துவமனைக்கு மாதிரிகளை அனுப்பிவைக்க உள்ளோம். ஆர்டர் டெலிவரிசெய்த ஜொமாட்டோ நிறுவனம்தான் இதற்கு பதில்கூற வேண்டும். தொடர்ந்து கர்நாடகாவில் எந் இடத்தில் இந்தஇறைச்சி வெட்டப் பட்டது, எந்தநிறுவனம் மூலம் பெறப் பட்டது என்ற முழு விசாரணையை மேற் கொள்ள உள்ளோம். ப்ரீசரில் வைத்த இறைச்சிகளே கெட்டு போயிற்று என்றால் எப்படி? இந்தஇறைச்சி வேறு எந்தமாதிரியான உணவகங்களுக்கு சென்றனஎன்பது குறித்து விசாரிப்போம். எதுவாக இருந்தாலும் ஆய்வறிக்கைக்குப்பிறகே உண்மைத்தெரியவரும். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended