• முகப்பு
  • கல்வி
  • டியூசன் வகுப்புகளை  இடைநிறுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல்

டியூசன் வகுப்புகளை  இடைநிறுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல்

யூ.எம்.இஸ்ஹாக்

UPDATED: Apr 4, 2024, 3:37:35 AM

கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் நாளை வியாழக்கிழமை ஏப்ரல்-04 முதல் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

Also Read : தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம்.

முஸ்லிம்களின் புனித நோன்பு மற்றும் தமிழ், சிங்கள புது வருடப் பிறப்பு போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளினைக் கொண்ட இம்மாதமானது அதிக உஷ்ணம் நிறைந்ததாக காணப்படுகின்றது.

இருந்த போதிலும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பொருத்தமற்ற நேரங்களில் தொடர்ச்சியான வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருவதானது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக மத அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து எமக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.

Aslo Read : பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்

இவற்றைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் 2024.04.04 ஆம் திகதி தொடக்கம் 2023.04.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதத்தின் பிரதிகள் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர், கல்முனை, சாய்ந்தமருது மற்றும் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Also Read :வேத்துச் சேனை கிராம மக்களுக்கு சாணக்கியனின் முயற்ச்சியால் குடி நீர் வசதி

VIDEOS

Recommended