தொண்டி பேரூராட்சியில் கடற்கரை பூங்கா அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.

கார்மேகம்

UPDATED: Jun 10, 2024, 10:11:38 AM

தொண்டி பேரூராட்சியில் நாளுக்கு நாள் புதிய குடியிருப்புகள் உருவாகி வளர்ந்து வரும் நகராக மாறி வருகிறது தொண்டியைச் சுற்றி 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர் பெரிய அளவில் வியாபாரம் நடைபெறுகிறது

ஆனால் தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பொழுது போக்குவதற்கான சிறப்பம்சங்கள் ஏதும் இல்லை இப்பகுதி மக்களுக்கு தொண்டி கடற்கரையில் உள்ள ஜெட்டி பாலம் தான் பெரும் பொழுது போக்கு இடமாக‌ நிகழ்ந்து வந்தது.

ஆனால் அந்த பாலமும் சேதமடைந்த தால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இது குறித்து அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கையில் தொண்டியில் பூங்கா வசதிகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது 

தொண்டி கடற்கரையில்‌ பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்றனர் பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு ஜவகர் அலிகான் கூறியதாவது

இது குறித்து பேரூராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் தொண்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கடற்கரையில் பொழுது போக்கு பூங்கா மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மைதானம் அமைக்க அதிகாரிகள் வந்து இடத்தை ஆய்வு செய்து சென்றுள்ளனர் விரைவில் பொழுது போக்கு பூங்கா கடற்கரை பூங்கா அமைக்கப்படும் என்றார்.

 

VIDEOS

Recommended