குறுஞ்செய்திகள்

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ள நிலையில் அதற்கான காலோலை இன்று (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான சரத் குமார மற்றும் மாவனல்லை சாஹிரா கல்லூரியின் அதிபர் ஏ.எச்.எம். நவூஷாட், ஆசிரியர் குழாம் சார்பில் எஸ்.எம்.நவாஸ், எம்.எஸ்.எம்.நலீம், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் ரிலாப் மொஹமட், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் எல்.மொஹமட் ரிப்கான், எம்,எஸ்.எம். நிலார்தீன் உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். 

தொல்பொருள் திணைக்களத்தில் 1,576 காலியிடங்கள் அதிகரிப்பு

தொல்பொருள் திணைக்களத்தில் 1,576 காலியிடங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 தொல்பொருள் திணைக்களத்தில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டி. துசித மண்டிஸ் தெரிவித்தார்.

இத்துறையில் 42 பணியாளர் தர அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இத்துறையில் கட்டிடக்கலை இயக்குநர் தவிர, மற்ற இயக்குநர்கள் அனைவரும் உதவி இயக்குநர்கள் என்றும், அவர்கள் அனைவரும் பணி கவரிங் பதவிகளில் பணிபுரிவதாகவும் இயக்குநர் ஜெனரல் தெரிவித்தார்.

மோதல் தொடர்பாக பக்க சார்பற்ற நேர்மையான விசாரணை உறுதி

(.ஜேஎம். ஹாபீஸ் )

கண்டி, மெனிக்கின்ன ஆதார வைத்திய சாலையில் சிகிட்சைக்காக அழைத்து வந்த நோயாளர் தரப்பிற்கும், வைத்தியசாலை தரப்பிற்கும் இடையே இடம் பெற்ற மோதல் தொடர்பாக பக்க சார்பற்ற நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அதிகாரிகளைப் பணித்துள்ளார். 

மேற்படி சம்பவத்தில் 7 பேர் இருதரப்பிலும் காயமடைந்து கண்டி தேசிய வைத்திய சாலையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் போது வைத்திய சாலைதரப்பினர் கடமை நேரத்தில் போதையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் ஆளுநர் மேற்படி உத்தரவை வழங்கியுள்ளார். சுகாதார பிரிவிற்கும், பொலீசாருக்கும் மேற்படி உத்தரவை ஆளுநர் வழங்கியுள்ளதாக ஆளுநர் காரியாலயம் தெரிவிக்கிறது.

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended