ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என்பது போல அரசு பேருந்துகளின் அவல நிலை

சுரேஷ்பாபு

UPDATED: May 3, 2024, 9:42:26 AM

தமிழ்நாடு அரசு 24 மணி நேரத்தில் அனைத்து அரசு பேருந்துகளை முழுவதுமாக சோதனை செய்ய வேண்டுமென இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் திருவள்ளூர் பகுதியில் இருந்து சுங்குவார்சத்திரம், செங்கல்பட்டு, திருத்தணி, பூந்தமல்லி, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகளும் மற்றும் மகளிர் இலவச பேருந்துகளின் இருக்கைகள், கியர் பாக்ஸ் அருகேயும், படி ஏறும் இடங்களிலும் டயருக்கு மேலேயும், இருக்கைகளின் கம்பிகளில் உடைப்பு விரிசல் உள்ளிட்டவைகள் ஏற்பட்டு உடைந்து சரிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த ஈயம் பித்தளை க்கு பேரிச்சம்பழம் தருவது போல் திருவள்ளூர் பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கும் இதே நிலை தான் உள்ளது.

இதனால் இந்த பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.

எனவே உடனடியாக இதுபோன்று இயக்கப்படும் பேருந்துகளை ஆய்வு செய்து அவற்றை சரி செய்து பயணிகளின் பயன்பாட்டிற்கு அனுப்ப வேண்டும் எனவும் பழுதடைந்த இது போன்ற பேருந்துகளை இயக்கக் கூடாது எனவும்

உயிர் சேதங்கள் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் இதனை திருவள்ளூர் போக்குவரத்து பணிமனையினர் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது. 

விடியாத திமுக அரசு மக்களின் உயிரோடு விளையாடாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended