போரூரில் எல் இ டி பல்பை விழுங்கிய 5 வயது சிறுவன்.

சுந்தர்

UPDATED: May 3, 2024, 9:41:58 AM

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக எல்இடி பல்பை முழுங்கியுள்ளான்.

முழுங்கிய எல்இடி பல்ப் நுரையீரலில் சென்று சிக்கியுள்ளது. இதனால் ஐந்து வயது சிறுவனுக்கு மூச்சுத் திணறல், இருமலும் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் அவரது பெற்றோர்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எல்.இ்.டி பல்பை ப்ராங்கஸ்கோபி மூலம் அதனை எடுக்க முயற்சி செய்துள்ளனர்.

இருப்பினும் பல்பை எடுக்க முடியாததால் அனைத்து மருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை மூலமாக பல்பை அகற்ற வேண்டும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதனால் பயந்து அவரது பெற்றோர்கள் அறுவை சிகிச்சை செய்யாமல் பல்வேறு மருத்துவமனையில் முயற்சி செய்து வந்துள்ளனர்

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 5 வயது சிறுவனை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளனர்.

அங்கு சிறுவனுக்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் ஒரு எல்இடி பல்ப் நுரையீரலில் பதிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ப்ரங்கஸ்கோபி மூலம் எடுக்க முயல்வதாகவும் முடியாவிட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என மருத்துவமனை தரப்பிலும் கூறப்பட்டு இருக்கிறது.

இதனை தொடர்ந்து சிறுவனுக்கு ப்ரங்கஸ்கோபி சிகிச்சை மூலம் சிகிச்சை தொடங்கப்பட்டது.

இரண்டு மணி நேரம் போராடி நுரையீரலில் சிக்கிக் கொண்டிருந்த எல்இடி பல்பை லாபமாக வெளியே அறுவை சிகிச்சை இன்றி ப்ரங்கஸ்கோபி சிகிச்சை மூலம் பத்திரமாக வெளியே எடுத்து மருத்துவமனை புதிய சாதனை படைத்துள்ளது.

தற்போது குழந்தை முழு உடல் நலம் பெற்று ஆரோக்கியத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்இடி பல்பை முழுங்கி ஒரு மாத காலமாக உயிருக்கு போராடி வந்த சிறுவனின் உடலில் அறுவை சிகிச்சை செய்யாமல் லாபகமாக பல்பை எடுத்து சிறுவனின் உயிரை மீட்ட சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

 

  • 6

VIDEOS

Recommended