• முகப்பு
  • இலங்கை
  • இலங்கையை பார்வையிட லெபனானிலிருந்து 30 பாடசாலை மாணவர்கள் வருகை

இலங்கையை பார்வையிட லெபனானிலிருந்து 30 பாடசாலை மாணவர்கள் வருகை

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Apr 23, 2024, 6:04:46 AM

தற்போது இலங்கையில் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் இலங்கையை நோக்கி படையெடுத்து வருவதாக சுற்றுலா துறை அமைச்சியை தெரிவித்துள்ளது.original/img_20240423_105741
இவ்வாறு இலங்கை நோக்கி வரும் சுற்றுலாத் துறையினருக்கு இலங்கை விமான நிலையத்தில் Onarrival விசா நடைமுறையினை நடைமுறைப்படுத்துவதாகவும் சுற்றலாமை செலுத்த தெரிவித்துள்ளது.

 இன்றைய தினம் கட்டார் விமானத்தின் மூலம் லெபனான் பய்ரூத் பிரதேசத்தில் அமைந்துள்ள அமெரிக்க சமூக பாடசாலையின் (America Community School) 30 மாணவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

 இம்மாணவர்கள் எதிர்வரும் 29 ஆம் தேதி வரை இலங்கையில் தங்கி இருப்பதாகவும் இவர்கள் பல்வேறு பாடசாலை மாணவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 இந்த குழுவுக்கு பாடசாலையின் ஆசிரியை சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த

Team leader Janine (Teacher) தலைமை தாங்கி வருகை தந்திருந்தார்.

 இலங்கை விமான நிலையத்தில் இருக்கின்றவர்களை சந்தித்தவர் அவர்கள் சிங்கள மொழியில் ஆய்போவ ன் ( வணக்கம் )மற்றும் நன்றி ( ஸ்துதி) போன்ற வசனங்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

  • 2

VIDEOS

Recommended