• முகப்பு
  • மற்றவைகள்
  • தேசிய நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் விசிக நிர்வாகி உயிர் பலி  பராமரிப்பு பணியை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை.

தேசிய நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் விசிக நிர்வாகி உயிர் பலி  பராமரிப்பு பணியை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை.

JK

UPDATED: Nov 25, 2024, 7:42:58 AM

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திலீபன் ரமேஷ் அவர்களின் அக்கா மகனும் விசிக வின் முற்போக்கு மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளருமான் வழக்கறிஞர் திருவெறும்பூர் தீனாவின் தம்பியும், விசிக வின் 41வது வார்டு செயலாளருமான் தினேஷ்(31) நேற்று இரவு திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சார கம்பத்தில் மின்சாரம் பாய்வதை பராமரிக்க தவறிய நெடுஞ்சாலை துறையின் அலட்சியத்தால் ஓர் உயிர் பலியானது தொடர்ந்து இதுபோன்ற மின்கசிவுகள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு கம்பிகளில் அவ்வப்போது பலருக்கு மின்சாரம் தாக்கி உள்ளதாக தகவல் வருகிறது உடனடியாக பால்பண்ணை முதல் துவாக்குடி வரையில் உள்ள மின்விளக்குகளை முறையாக பராமரிப்பு செய்து மின்கசிவு இல்லை என்பதை உறுதி செய்திட வேண்டும்

Latest Trichy News 

டோல் கட்டணம் என்ற பெயரால் பல லட்சம் கோடி கொள்ளை அடிக்கும் நிர்வாகம் நெடுஞ்சாலைகள், மின் விளக்குகளை பராமரிப்பு பணியை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 1கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஓருவருக்கு அரசு பணியும் வழங்கிட தேசிய நெடுஞ்சாலை துறையும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு திருவரம்பூர் ஆர்டிஓ அருள், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் வருகை தந்துள்ளனர். 

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், வழக்கறிஞர் அணி நிர்வாகி பழனியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended