• முகப்பு
  • மருத்துவம்
  • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துமனையில் சிடி ஸ்கேன் அரங்கம் திறப்பு

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துமனையில் சிடி ஸ்கேன் அரங்கம் திறப்பு

மாரியப்பன்

UPDATED: Mar 9, 2024, 9:52:20 AM

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ஹாஸ்பிட்டலில் சி.டி ஸ்கேன் அரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது.

Also Watch :கும்பகோணத்தில் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு வெகு சிறப்பாக நடைப்பெற்ற நாட்டியாஞ்சலி விழா.

தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து அதி நவீன சி.டி ஸ்கேன் அரங்கத்தை திறந்துவைத்து சிடி ஸ்கேன் இயக்கத்தை தொடங்கிவைத்து பேசுகையில், இந்த அதி நவீன சி.டி ஸ்கேன் மூலம் தலை, கழுத்து, மூளை, மார்புப்பகுதி , வயிறு மற்றும் இடுப்பு, கை,கால்கள், முதுகு தண்டுவடம் , முககாற்றுதுவாரம், முகம் உள்ளிட்ட அனைத்து பாகங்களையும் ஸ்கேன் செய்ய முடியும்.

Also Watch : திருவாவடுதுறையில் சிவராத்திரியை முன்னிட்டு ஆறாம் ஆண்டு ருத்ர நாட்டிய அஞ்சலி கோலாகலமாக நடைபெற்றது.

இதே போல் மூளை ஆஞ்சியோகிராம், நுரையீரல் ஆஞ்சியோகிராம், மூச்சுக்குழாய் ஆஞ்சியோகிராம், பெருநாடி ஆஞ்சியோகிராம் , கை,கால்கள் ஆஞ்சியோகிராம், சிறுநீரக ஆஞ்சியோகிராம், சி டி.வழிகாட்டி பயாப்ஸி, போன்ற ஸ்பெஷல் ஸ்கேன்களும் செய்யமுடியும்.

Also Watch : கும்பகோணத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரசுவாமி திருக்கோயிலில் விடிய விடிய சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

இந்த ஸ்கேன் வசதியை பெற மற்ற மருத்துவ ஸ்கேன் சென்டர்களில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செலவாகும். இந்த சி டி ஸ்கேன் சென்டரில் பொதுமக்களுக்கு அனைத்து வகையான ஸ்கேன்களும் இலவசமாக செய்யப்படுகிறது. இந்த சிறப்பான சேவையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.

Also Watch : தென்காசி நகர்மன்ற கூட்டத்திற்குள் சொறிநாயை அழைத்து வந்த கவுன்சிலர்

தனலட்சுமி சீனிவாசன் குழும இயக்குநர் நிர்மல் கதிரவன், அறக்கட்டளை உறுப்பினர் ராஜபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தார். டீன் விசுவநாதன், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Also Read : பெரம்பலூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு 10க்கு மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

VIDEOS

Recommended