• முகப்பு
  • கல்வி
  • எந்த படிப்பும் தாழ்ந்ததல்ல ஒவ்வொரு படிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததே  உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

எந்த படிப்பும் தாழ்ந்ததல்ல ஒவ்வொரு படிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததே  உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

வேல் முருகன்

UPDATED: Apr 23, 2024, 8:01:12 PM

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்கள், கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

10,12 ம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எந்தெந்த துறைகளை தேர்வு செய்யலாம் என்ற விரிவான தகவல்களோடு 30 க்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் விளக்கவுரையோடு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 10 &12 ம் வகுப்பு முடித்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களும் அவர்களது பெற்றோர்களும் ஆசிரிய பெருமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மதியழகன் வரவேற்புரையாற்றினார்.

விழாவில் பங்குபெற்ற மாணவர்களை வரவேற்று உற்சாகப்படுத்தி பேசிய தாளாளர் இரகுநாதன், 

உயர்கல்வியில் எந்தக் கல்வியும் மற்றொரு கல்விக்கு தாழ்ந்ததல்ல. 

ஆசிரியர் , மருத்துவர்கள் , பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் , ஆராய்ச்சியாளர்கள், செவிலியர்கள் என ஒவ்வொருவரும் அந்தந்த துறையில் சிறப்பானவர்களே. 

ஒவ்வொரு படிப்பும் அந்தந்த துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததே. 

எனவே எந்த ஒரு கல்வியையும் மற்றொரு கல்வியோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டாம் 

அவரவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத் துறை தொடர்புடைய உயர்கல்வி பாடங்களை விருப்பமுடன் எடுத்த படித்து அந்த துறையில் சிறப்பான இடத்தைப் பெற்று சாதனைகளை புரியவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

வாழ்க்கையின் தேவைகளையும் வெற்றிகளையும் உயர்வுகளையும் பொருளாதார உயர்வுகளையும் கல்வியும் உழைப்பும் தீர்மானிக்கும் என்று தொடங்கி பல கல்வியாளர்கள் , அறிஞர்கள் , தொழிலதிபர்கள் , சாதனையாளர்களின் வாழ்க்கையையும் அவர்களின் திறனையும் சிறப்பாக குறிப்பிட்டார்.

கல்வியின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொருவரும் உயர்கல்வி பயிலவேண்டும் ..இதன் மூலம் வாழ்க்கையில் உயருதல் வேண்டும் என்றார். 

பெண் கல்வியின் அவசியம் , பெண்கள் வேலைக்கு செல்லுதல், சுயமாக சம்பாதிக்க வேண்டியதன் அவசியம், பெண்கள் ஏன் படிக்க வேண்டும் , கல்வியால் பெண்களின் வாழ்க்கைத்தரம் எப்படி உயரும் , கல்வி பெண்களுக்கு கொடுக்கும் தன்னம்பிக்கை , சம உரிமை, பொருளாதார உயர்வு, பதவி, அதிகாரம் போன்ற பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை மிகச் சிறப்பாக குறிப்பிட்டார்.

எனவே எந்த படிப்பு படித்தாலும் அதை நீங்கள் ஆர்வமுடன் படித்து அதில் உங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வெற்றி காண வேண்டும் வாழ்த்தினார். 

இயக்குநர் முனைவர். வை.தியாகராஜன் அவர்கள் நல்ல ஆளுமைமிக்க மனப்பான்மையை வளர்த்துகொள்ளுங்கள் என தொடங்கி பல்வேறு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்தி பேசினார். 

தமிழகத்திலும் இந்தியாவிலம் வெளிநாடுகளிலும் பொறியியல் கல்வியின் அவசியம் குறித்தும் வேலைவாய்ப்பு குறித்தும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் உரையாற்றினார்.

மீரா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் அவர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசியது சிறப்பாக அமைந்தது.

அன்னை தெரசா பாராமெடிக்கல் கல்லூரியின் தாளாளர் அவர்கள் வாழ்க்கைக்கு அவசியமாக பணத்தைவிட வீரத்தைவிட கல்வியே முக்கியம் என சிறப்பாக பேசி உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் 500க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியை மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திமுடித்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் அரிவசந்த் அவர்கள் நன்றி கூறினார்.

 

VIDEOS

Recommended