- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தனுஷ் கோடி எம்.ஆர்.சத்திரம் சோதனைச்சாவடி செயல்படுமா ?
தனுஷ் கோடி எம்.ஆர்.சத்திரம் சோதனைச்சாவடி செயல்படுமா ?
கார்மேகம்
UPDATED: Apr 23, 2024, 7:15:20 PM
தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் சோதனைச் சாவடி செயல்படாததால் கடத்தல் காரர்கள் பொருட்களை எளிதாக கடத்தி செல்கின்றனர்.
எனவே இந்த சோதனைச் சாவடியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது
அதற்கு முக்கிய காரணம் ராமேஸ்வரம் அருகே இலங்கை கடல் பகுதி உள்ளதாலும் அவ்வப்போது இலங்கையில் இருந்து கடத்தல் காரர்கள் மூலம் தங்க கட்டிகள் படகில் கடத்தி கொண்டு வரப்படுவதாலும் தான்
அதுபோல் இலங்கைக்கு பீடி இலை பண்டல், கஞ்சா, ஹெராயின், மருந்து பொருட்கள், ஏலக்காய், மஞ்சல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இங்கிருந்து கடத்தப்படுகின்றன
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்த கடலோர போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது
ALSO READ | தினம் ஒரு திருக்குறள் 24-04-2024
தனுஷ் கோடி எம்.ஆர் சத்திரம் கடற்கறையில் பல ஆண்டுகளாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு அங்கு இரவு பகலாக போலீஸ்சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்
இந்த நிலையில் எம்.ஆர் சத்திரம் கடற்கரை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கடலோர போலீஸ் சோதனை சாவடி கடந்த சில மாதங்களாக போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது
தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை பகுதியாக இருந்தும் கடத்தல் அதிகம் நடைபெற்று வரும் நிலையிலும் இந்த சோதனைச் சாவடியை பயன்பாட்டிற்கு கொண்டுவர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் தனுஷ்கோடி கடற்கரை பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது
இது கடத்தல் காரர்களுக்கு பொருட்களை எளிதில் கடத்திச் செல்ல வாய்ப்பாக உள்ளது
ஆகவே இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும உயர் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி தனுஷ்கோடி கடற்கரை வழியாக நடைபெறும் கடத்தலை தடுக்கவும் பாதுகாப்பை பலப்படுத்தவும் தனுஷ்கோடி எம்.ஆர் சத்திரம் கடற்கரையில் சோதனை சாவடியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.