- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 96.36 சதவீதம் தேர்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 3 - வது இடம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பாராட்டு.
96.36 சதவீதம் தேர்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 3 - வது இடம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பாராட்டு.
கார்மேகம்
UPDATED: May 11, 2024, 10:02:19 AM
10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 96.36 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாநில அளவில் 3 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 761 மாணவர்கள் 7 ஆயிரத்து 931 மாணவிகள் என 15 ஆயிரத்து 692 பேர் 10-ம்வகுப்பு பொதுத் தேர்வு எழுதி இருந்தனர்.
தேர்வு முடிவின்படி 7 ஆயிரத்து 372 மாணவர்கள் 7 ஆயிரத்து 749 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 121 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் மாநில அளவில் 96.36 சதவீதம் தேர்ச்சியுடன் ராமநாதபுரம் மாவட்டம் 3 வது இடம் பிடித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 138 அரசு பள்ளிகளில் 64 பள்ளிகள் 100/ சதவீதம் அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 17 பள்ளிகள் 100 சதவீதம் 75 மெட்ரிக் பள்ளிகளில் 52 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன
கடந்த 2021-22 ம் கல்வி ஆண்டில் 94.26 சதவீத தேர்ச்சியுடன் 5 வது இடமும் 2022-23 ம் கல்வி ஆண்டில் 93.86 சதவீத தேர்ச்சியுடன் 12 வது இடமும் இந்த 2023-24 ம் கல்வி ஆண்டில் 96.36 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 3 வது இடமும் பிடித்துள்ளன
மாநில அளவில் 3 வது இடம் பிடிக்க காரணமான மாணவ மாணவிகளையும் பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் கல்வித்துறையினரையும் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பாராட்டினார்.