- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தமிழக எல்லையில் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் திடீர் ஆய்வு.
தமிழக எல்லையில் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் திடீர் ஆய்வு.
சுரேஷ் பாபு
UPDATED: May 26, 2024, 7:34:31 AM
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் பேரூராட்சி அருகில் உள்ளது தமிழக எல்லை இந்த பகுதிக்கு அடுத்த மாநிலமாக ஆந்திர மாநிலம் உள்ளது
ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பள்ளிப்பட்டு போலீஸ் சோதனை சாவடியை கடந்து வரவேண்டும்
இந்த தமிழக எல்லைப் பகுதியில் தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
இந்த ஆய்வில் போலீஸ் சோதனைச் சாவடி அமைந்துள்ள பகுதியில் அதிநவீன கேமராக்கள் பொருத்துவது குறித்தும், மேலும் சோதனை சாவடியில் காவல்துறைக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்தும், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்
ALSO READ | காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருவது நிமிடத்திற்கு மேலாக ஆய்வுகள் மேற்கொண்டு குறிப்புகளை எடுத்துக் கொண்டு இந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கி அந்த பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு காளாஸ்திரி கோயிலுக்கு புறப்பட்டு சென்றார் அமுதா ஐ.ஏ.எஸ்
இந்த ஆய்வின்போது திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.