சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று முதல் தடை நீக்கம்.

ராஜா

UPDATED: May 16, 2024, 1:37:23 PM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ள சுருளி அருவியில் தற்போது பெய்து வரும் வெப்பச்சலான மழையினால் அறிவிக்கு நீர் வருவதை அடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு வனத்துறையினர் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்ததை நீக்கி நேற்று முதல் அனுமதி அளித்தனர்.

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள அருவிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமான சுருளி அருவியில் சுற்றுலாத்தலமாகவும் ஆன்மீகத் தலமாகவும் மக்களால் பார்க்கப்படுகிறது.

இங்கு அமைந்துள்ள பூத நாராயணன் கோவிலில் பௌர்ணமி அமாவாசை ஆடி அமாவாசை போன்ற முக்கிய தினங்களில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது போன்ற முக்கிய நிகழ்வுகள் சுருளி அருவியில் நடைபெறும்

மேலும் இங்கு அமைந்துள்ள கோடிலிங்கம் சிவாலயங்கள் மிகவும் பிரபலமானவை ஆகையால் தேனி மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அறிவியல் நீர் வரத்து இல்லாத காரணத்தினால் நீண்ட நாட்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஒரு வார காலமாக தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மிதமான மலையின் காரணமாக அறிவிக்கு நீர் வரத்து வந்துள்ளதால் நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தது வனத்துறை.

இதனால் தேனி மாவட்டம் மக்களும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவாக தற்போது வனத்துறையினர் குளிக்க அனுமதி அளித்திருப்பது பெருமகிழ்ச்சி அடைவதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended