- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.
மஞ்சளார் அணை அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை.
ராஜா
UPDATED: Jun 20, 2024, 3:00:12 PM
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் முதல் அவ்வப்போது பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து தொடங்கி அணையின் நீர்மட்டம் 42 அடியில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பெருமாள்மலை, பாலமலை, பண்ணைக்காடு, வடகரைபாறை, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்த நிலையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்த நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து மஞ்சளார் ஆற்றின் கரையோர பகுதிகளான தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, தும்மலப்பட்டி, G.கல்லுப்பட்டி, வத்தலகுண்டு, விருவீடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மஞ்சளார் அணைக்கு வரும் 94 கன அடி உபரி நீரை அப்படியே இரு மதகு மூலம் திறந்து விட்டு பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அணையில் நீர் இருப்பு 435.32 மில்லியன் கனாடியாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.