- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் உழைப்பு - சிஐடியு
வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் உழைப்பு - சிஐடியு
லட்சுமி காந்த்
UPDATED: Jul 9, 2024, 5:42:51 AM
kanchipuram district news - kanchipuram news today live - Kancheepuram district news in tamil
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுக்கோட்டை, தண்டலம், வல்லம் வடக்கால், மாத்தூர் , ஒரகடம், படப்பை, மணிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில்
பெரிய, சிறு ,குறு தொழிற்சாலைகள் ஏராளமாக இயங்கி வருகின்றது. இந்தத் தொழிற்சாலைகளில் மாவட்ட, மாநில அளவில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலைக்கு ஏற்ற சம்பளம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. அதே போல் பல நிறுவனங்கள் 8 மணி நேர வேலை நேரத்தை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களை 10 மணி நேரம் 12 மணி நேரம் என வேலை வாங்குகின்றது.
இது போன்ற பல பிரச்சனைகளை ஒழுங்குபடுத்த வேண்டும், தொழிலாளர்கள் அடிப்படை உரிமையை கேட்டு பெற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக அந்தந்த நிறுவனங்களில் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் அமைப்பது சட்டப்பூர்வமான ஒன்று, என்ற நிலையில், தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்ட தொழிற்சங்கங்களை செயல்பட விடாமல் முடக்க வைப்பதும், தொழிற்சங்கத்தை தடுத்து நிறுத்துவதும், அமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தை வெளியேற்றுவதும், தொழிற்சங்கங்களை இல்லாமல் செய்வதும் உள்ளிட்ட பல விதமான சட்ட விரோதமான நடவடிக்கைகளை நிர்வாகம் தரப்பில் எடுப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சுமத்துகின்றனர்.
அதையும் மீறி தொழிற்சங்கங்கள் அமைத்தால் தொழிற்சங்க நிர்வாகிகளை பணியிட நீக்கமோ பணி நீக்கமோ அல்லது சம்பளம் போனஸ் உள்ளிட்டவைகளை முடக்கி வைக்கும் செயலையும் பல நிர்வாகங்கள் செய்து வருவதாக குற்றம் சாட்டப் படுகின்றது.
சிஐடியு
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சிஐடியு தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழிற்சாலையை வைத்து நடத்திவரும் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனமே சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தை நிராகரிக்க பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகின்றது.
சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட சிஐடியு தொழிற்சங்கத்தை, அங்கீகரிக்காமல் அதை முடக்கவும் அதை ரத்து செய்யவும் பல விதமான முயற்சிகளை நிர்வாகம் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
Kanchipuram News in Tamil
அதனை ஒட்டி தொழிலாளர்களுக்கு பலவிதமான அச்சுறுத்தல்களும் பணி நீக்கம் உள்ளிட்ட பலவித சதி செயல்களை செய்ய முயற்சிப்பதாகவும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தொழிற்சங்கத்தை சாம்சங் நிறுவனம் அங்கீகரிக்க வேண்டும் தொழிலாளர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி சாம்சன் நிறுவனம் முன்பு கேட் மீட்டிங் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட சாம்சங் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சிஐடியின் மாநில செயலாளர் முத்துக்குமார் அவர்கள் கலந்து கொண்டு தொழிலாளர்களிடையே பேசும்போது, சட்டபூர்வமாக அமைக்கப்படும் தொழிற்சங்கங்களை கூட நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாமல் சங்கத்தை வெளியேற்ற சட்ட விரோதமான செயல்களை கையில் எடுக்கின்றது.
ALSO READ | ஒரே டிக்கெட்டில் பயணம் - செயலி உருவாக்க உத்தரவு
Latest Kancheepuram news & live updates
பலவிதமான தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலைப்பளுவை தொழிலாளர்கள் மீது நிர்வாகம் சுமத்துகிறது. அதற்குண்டான கூலியை கூட கொடுப்பதில்லை. வேலை பளுவின காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தொழிலாளர்கள் மருத்துவமனையை நாடும் போக்கு அதிகரிக்கின்றது.
சங்கம் ஆரம்பிக்கப் போகின்றது என தெரிந்த உடனே தொழிலாளர்களை அழைத்து அவர்களுக்கு பாதாம் பிஸ்தா உள்ளிட்டவளை அளித்து அவர்களை தன் வசப்படுத்த நிர்வாகம் முயல்கின்றது.இதெல்லாம் கேட்காமலே கொடுக்கும் நிர்வாகம் தொழிற்சங்கத்தை மட்டும் ஏன் அங்கீகரிக்க மறுக்கின்றது.
அதுமட்டுமல்ல ஒரே நேரத்தில் ஒரேவிதமான வேலையை செய்கின்ற தொழிலாளர்களுக்கு கூட சம்பள விகிதத்தில் மிகுந்த ஏற்றத் தாழ்வு உள்ளது. மனித வள அலுவலரை தாஜா செய்தால் அவர்களுக்கு சம்பளம் அதிகமாக அளிக்கப்படுகின்றது.
இதைப் பற்றி கேட்டால் தொழிலாளர்களுக்கு ஹெச் ஆர் மூலமாக அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.
எங்கள் உயிர் எங்களிடமே உள்ளது. உங்கள் உயிர் உங்களிடம் இல்லை அது முதலீடாகவும், உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எங்களிடத்தில்தான் உங்கள் உயிர் உள்ளது. அதனால் புரிந்து கொண்டு நடங்கள் என மறைமுகமாக நிர்வாகத்தை எச்சரித்தார்.
மேலும் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் நாளொன்றுக்கு ஏழு மணி நேரம் உழைப்பும், வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலையும் அளிக்க நிர்வாகம் முன் வர வேண்டும். இதை அனைத்து நிர்வாகங்களும் அங்கீகரிக்க வேண்டும் தொழிற்சங்கம் வைத்துள்ள இந்த கோரிக்கையை , நிர்வாக தரப்பில் அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என முத்துக்குமார் தெரிவித்தார்.
சாம்சங் நிர்வாகத்தை கண்டித்தோ, எதிர்த்தோ எந்த தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ, வேலை நிறுத்தமோ செய்யாத நிலையில், இன்று நடைபெற்ற நுழைவு வாயில் மீட்டிங் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.
பேட்டி முத்துக்குமார் சிஐடியு மாநில செயலாளர்.