ஒரே நாளில் 800 மாணவிகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி.

Bala

UPDATED: Oct 5, 2024, 6:58:25 PM

கன்னியாகுமரி

தவப்புதல்வி கிராமப்புற பெண்களின் திறன் மேம்பாட்டு வளர்ச்சி பணியின் ஓர் அங்கமாக 18 இடங்களில் 18 க்கும் மேற்பட்ட ஜே சி ஐ பயிற்சியாளர்கள் கொண்டு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியர் சார்பாக 12 கல்லூரிகளில் நடைபெற்றது.

முன்னதாக கிராமப்புற தையல் கலைஞர்களை கொண்டு 20 நாட்களில் 2024 வண்ணமயமான மேலங்கி தயாரித்து கல்லூரி மாணவிகள் பெருமளவில் அணிந்து குளோபல் உலக சாதனையில் பங்குபெற்ற நிகழ்வை தொடர்ந்து நேற்று கல்லூரி மாணவிகளுக்கு கிராமப்புற பெண்களின் உற்பத்தியை சந்தைப்படுத்த உறுதுணையாக மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப வாயிலாக சந்தைப்படுத்தும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

எங்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் பெண்களின் பொருளாதார வளர்ச்சியில் உதவிடவும் எங்களுடைய இந்த பயிற்சி பெருமளவில் பங்களிக்கும் என மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெவித்தது இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான தொலைநோக்கு பார்வையை வெளிப்படுத்துகிறது எனவும்

இணையவழியில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பொருட்கள் உருவாக்குதல், விளம்பரப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தலுக்கான பயிற்சி தவப்புதல்வி சார்பாக அளிக்கப்படும் எனவும் தவப்புதல்வி தனியார் திட்டத்தின் அமைப்பாளர் மற்றும் ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியரின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை தெரிவித்தார்.

மாணவிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியில் உற்சாகமாக பங்கேற்றது மேலும் பல மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ஊக்கமளிப்பதாக பயிற்றுனர்கள் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended