சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 24வது மாநில மாநாடு

JK

UPDATED: Aug 10, 2024, 11:20:59 AM

திருச்சி 

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் சார்பில் 24வது மாநில மாநாடு, மற்றும் தமிழக அரசு நன்றி சொல்லும் நிகழ்ச்சி இன்று அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே என் நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாநாட்டு மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். 

சித்த மருத்துவ மாநில மாநாடு

மாநாட்டில் பழனியில் சித்த மருத்துவ கல்லூரி, பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து சித்த மருத்துவக் கல்லூரிக்கு ரூ. 42 லட்சம் நிதி ஒதுக்கீடு  செய்தமைக்கும்,

மேலும் சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக அரசுக்கும், முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கும் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வது, சித்த மருத்துவ நல வாரியத்தை தொடங்கி பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்,

அக்குபஞ்சர்

சித்த மருத்துவர்களின்  கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கவும் ஆவன செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும், அக்குபஞ்சர் கவுன்சில் ஆரம்பிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர், வைரமணி டாக்டர்கள் ஹரிராமன், நாகர்கோயில் செல்வராஜ், திருவண்ணாமலை கஜேந்திரன் சுவாமிகள், டாக்டர் தமிழரசி சுப்பையாடாக்டர் விஜய் கார்த்திக் மற்றும் தமிழகமெங்கும் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

VIDEOS

Recommended