• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவாரூரில் திருட்டு மற்றும் காணாமல் போன 106 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு.

திருவாரூரில் திருட்டு மற்றும் காணாமல் போன 106 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு.

ஜெயராமன்

UPDATED: May 5, 2024, 8:17:41 AM

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் திருட்டுப்போனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2022 - 23 - 24 ஆம் வருடத்தில் திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்களில் விசாரணை நடைபெற்றது ,

சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மூலம் தொடர்விசாரணை நடைபெற்று அதிநவீன வசதிகள் மூலம் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இதில் திருட்டு மற்றும் காணாமல் போன 17 லட்சம் மதிப்புடைய  106 ஆண்ட்ராய்டு வகை செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.

இதனை திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார் ,

மீதம் பெறப்பட்ட புகார் மனுக்களின்படி காணாமல்போன செல்போன் கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடைபெற்ற வருகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் செல்போன்களை பத்திரமாக வைத்து கொள்ளவேண்டும் , பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்த வேண்டும் , செல்போன் பற்றிய அனைத்து புகார்களையும் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended