கிணத்துக்கடவு சந்தையில் காய்கறிகள் விலை வீழ்ச்சி.

நாகராஜ்

UPDATED: Feb 13, 2024, 10:52:08 AM

கிணத்துக்கடவு மற்றும் அதன் வட்டார பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள் பறித்து வந்து, தினசரி காய்கறி சந்தையில் நடைபெறும் ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.25-க்கும், பச்சை மிளகாய் ரூ.60-க்கும், வெண்டைக்காய், பாகற்காய், பீர்க்கங்காய் ஆகியவை ரூ.65க்கும் விற்பனையானது.

ஆனால் நேற்று நடைபெற்ற ஏலத்தில் விலை வீழ்ச்சி அடைந்த இருந்தது  இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

காய்கறிகள் விலை நிலவரம் (கிலோ வில்) வருமாறு; தக்காளி ரூ.20 பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.17 , அவரைக்காய், ரூ.35 பச்சைமிளகாய் ரூ.40, பொரியல் தட்டை பயிறு ரூ.40 , முருங்கைக்காய் ரூ.80க்கும் ஏலம் போனது.

காய்கறிகள் அனைத்தும் கடந்த மாதத்தை விட கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.20 வரை குறைவாக ஏலம் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Recommended