• முகப்பு
  • வணிகம்
  • சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக கைத்தொழிற்சாலையாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக கைத்தொழிற்சாலையாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Feb 29, 2024, 9:06:46 AM

இலங்கையில் கடந்த கொவிட் தொற்று மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல். பொருளாதார நெருக்கடியினால் ஆகிய பிரச்சினைகளினால் நாடு பாதிக்கப்பட்டதானால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக கைத் தொழிற்சாலையாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.  

தமது சிறு மற்றும் நடுத்தர வியாபார நோக்கத்திற்காக பல்வேறு வர்த்தக நோக்கத்திற்காக அரச ,மற்றும் தனியார் வர்த்தக வங்கிகளில் நாம் பெற்றுக் கொண்ட கடன்களை (பாட்டி சட்டத்திற்குட்பட்ட கடன் திட்டம்) தள்ளுபடி செய்து தருமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

Also Read.பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த பயிலுணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

மேற்படி விடயம் நீதியமைச்சில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் அமைப்பினர்கள் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டிலேயே மேற்படி தகவல்களைத் உரிய அமைப்பாளர்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்  

இவ் ஊடக மாநாட்டில் இவ் அமைப்பின் இணைப்பாளர் திரு ராகவன், பணிப்பாளர் சசிகலா டி சில்வாவும் இவ் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்

Also Read.இலங்கை சுதந்திரம் அடைவில் முஸ்லிம்களின் பங்களிப்பு

இந்த நாட்டில் ஏற்பட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளினால் சிறிய மற்றும் நடுத்தர வணிக கைத்தொழில் (எஸ்.எம்.ஈ) ஊடகா தாம் முதலிட்டு வியாபாரம் அல்லது கைத்தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்காக பல்வேறு பட்ட வங்கிகளில் கடன்களைப் பெற்றிருந்தோம்.

அதற்காக தங்களது சிறிய தொழிற்சாலைகள், வீடுகள் ஆதன சொத்துக்களை ஆதன ஈடாக வங்கியில் வைத்தே கடன்களை பெற்று எமது வியாபாரத்தினையும் ஆரம்பித்தோம் கடந்த காலத்தில் இலங்கையில் கோவிட் தொற்று மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பொருளாதார பிரச்சனைகள் ஏற்பட்ட போது எங்களால் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாமல் போகிவிட்டது. இதனால் எமக்கு எதிராக வங்கிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

Also Read.கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் போலீசாரால் கைது

அத்துடன் சில வங்கிகள் எமது சொத்துக்களை மீளப்பெற்று அதனை விற்பதற்கு முடிபு செய்துள்ளது. 

இவ் வங்கிகளுக்கு எதிராக நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம். சிலரது சொத்துகளை வங்கிகள் விற்பதற்கும் முடிபு செய்துள்ளது. அதற்காகவே நாங்கள் மேன்முறையீடு செய்திருந்தோம். நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இந் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்   

ஆகவே இவ் வங்கிகளிடமிருந்து சிறிது கால அவகாசம் வழங்குமாறு நீதியமைச்சர், கைத்தொழில் அமைச்சரிடமிடமும் கோரிக்கை விடுத்தோம். அந்த வகையில் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து ஓர் சங்கம் அமைத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பி.எம்.ஜ.சி.எச் ல் ஒன்று கூடி சம்பந்தப்பட்டோர்களை அழைத்து கலந்துரையாடினோம். தற்பொழுது சுமார் 10800 க்கும் மேற்பட்ட சிறு வர்த்தகர்கள் கடன் பெற்ரோர்கள் நாட்டில் நாலா பாகத்திலும் உள்ளனர்

Also Read.தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டம் முன்னெடுப்பு

அங்கு வருகை தந்திருந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர் தனது நிலையை விளக்கமளிக்கையில் அரிசி ஆலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு 5 கோடி ருபா கடன் பெற்று அதனை வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தேன். அந் நிலையில் மேற்படி நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.அதனால் எனது அரிசி ஆலை மூடப்பட்டு இருந்தது.. நான் பெற்ற கடன் பெற்ற கடனை தவனை முறையில் செலுத்தத் தவறினால். அதனால் எனது வங்கியான சம்பத் வங்கி எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. எனது சொத்துக்கள் வீடு உட்பட அரிசி ஆலைகள் வாகனங்கள் மீளப் பெற்றுவிட்டது. அத்துடன் எனது வீட்டில் இருந்து என்னை வெளியே போகச் சொன்னது அதில் நான் மேன்முறையிடு செய்துள்ளேன். . 

 கடந்த காலங்களில் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வங்கிகள், இலங்கை மத்திய வங்கி, நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாப்பிட்டிய, கைத்தொழில் அமைச்சர் டாக்டர் ரமேஸ் பத்திரன ஆகியோர்கள் கலந்துரையாடியது பயனாக இக்கடன் செலுத்துதலுக்கு கால அவகாசம் தரப்பட்டிருந்தது. அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்காக நாங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம். அத்துடன் நிரந்தரமாக இக் கடனை தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் படி அரசாங்கத்தினை கேட்டுக் கொள்கின்றோம்.

Also Read.ஏகாதிபத்தியவாதிகளின் அட்டூழியங்கள் அன்றும் இன்றும் உள்ளன

அதேவேளை நீதியமைச்சர் விஜயதாச ராஜபச்ச அவர்கள் இக் கடனை தள்ளுபடி சம்பந்தமான சட்டரீதியாக வரைபுகளை வரைந்து நிரந்தரமாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் நன்மையாக தள்ளுபடி செய்யுமாறு வேணடிக் கொள்கின்றோம் அதற்காகவே நீதியமைச்சரைசை் அவரது அமைச்சில் சந்தித்து இவ் விடயத்தினை அவர் கவனத்திற்கு இங்கு கொண்டுவந்துள்ளோம். அத்துடன் அவருடனும் அமைச்சர் ரமேஸ் பத்திரன, மற்றும் நிதியமைச்சர்கள், இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்ததை நடாத்தி வருவதாக அங்கு கருத்து தெரிவித்தா ராகவன் தெரவித்தார்.

VIDEOS

Recommended