• முகப்பு
  • அரசியல்
  • செத்தாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கண்ணீர் மல்க பேசிய துரை வைகோ.

செத்தாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கண்ணீர் மல்க பேசிய துரை வைகோ.

JK 

UPDATED: Mar 24, 2024, 3:03:22 PM

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சியில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாழர் அறிமுக கூட்டம் மற்றும் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி வேட்பாளர் துரை வைகோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Also Watch : வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துகிறார்கள் உண்மையா ?

இந்நிகழ்வில் ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேச்சு:

இன்று பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள் நீங்கள் முருகன் போல உலகத்தை சுற்ற வேண்டும் என அவசியம் இல்லை பிள்ளையார் போல உள்ள முதன்மை செயலாளர் நேருவை சுற்றி சுற்றி வந்தால் வெற்றி நமதே மதிமுக முதன்மை செயலாளர் எங்கள் முதன்மை செயல்லாளரால் ஜெயிக்க உள்ளார்

பொருளாதாரமாக இருந்தாலும் சரி வாக்கு வங்கியா இருந்தாலும் சரி அவரி சுற்றி சுற்றி பிடிங்கள் என கூறினார்

மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி பேசுகையில் :

சிறுகனூரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே துரை வைகோ வெற்றி பெற்று விட்டார்

கடந்த காலத்தில் திருச்சிக்கு வந்த யாரும் வீணாக சென்றதில்லை ஏனென்றால் திமுகவினர் கூட்டணி கட்சியை வேறுபடுத்தி பார்த்ததில்லை அந்த காலத்தில் நின்ற கூட்டணி கட்சிகள் எல்லாம் பெரிய விசயத்தில் வெற்றி பெற்று சென்றுள்ளனர்

நீங்கள் முருகன் போல பிள்ளையாரை போல சுற்ற தேவையில்லை எங்கள் அண்ணன் நேரு உங்களை ஜெயிக்க வைப்பார் ஆனால் நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என எங்களது எண்ணம் என தெரிவித்தார்

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு:

ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பது போல திருச்சி பெரம்பலூர் கரூர் தொகுதிகள் நாம் வெற்றி பெறுவது உறுதி

துரை வைகோ இன்று களத்தில் இறங்கியுள்ளார் அவரை வெற்றி பெற வைக்க இரண்டு காரணங்கள் உள்ளது ஒன்று தொகுதி வளர்ச்சி மற்றொன்று பாசிச பாஜகவை வீழ்த்துவது காரணம் மோடி திமுகவை அழிப்பேன் என கூறி உள்ளார் திமுகவை அழிப்பேன் என கூறியவர் தான் ஒழிந்து போய் உள்ளார் எனவே எங்களது கருவியாக தான் உங்களை பயன்படுத்த போகிறோம் என்றார்

நேரு அண்ணனிடம் நான் வைக்கும் கோரிக்கைகள் ஒன்று திருச்சி பாராளுமன்ற தொகுதி மாவட்ட செயலாளர்கள் நான், வைரமணி , செல்ல பாண்டியன் இதில் யார் அதிகப்படியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

*ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை பூர்வீகமாக கொண்ட இயக்குனர் சமுத்திரக்கனி, 5 வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகை தந்தார்.

அங்குள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் பூக்குழி திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

Also Watch : ஆளுநர் மாளிகையில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்கினேன் ஆல் த பெஸ்ட் என்று ஆர்.எம் ரவி கூறினார் - மு.க.ஸ்டாலின்

பின்னர் பக்தர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கி வரும் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிறைவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் அதை விடுத்து மக்கள் பணி செய்ய உள்ளேன் என்ற அறிவிப்பு மிகவும் பிடித்துள்ளது. நான் பலரைக் கடந்து வந்துள்ளேன் யாரும் இதுபோன்ற முடிவு எடுத்ததில்லை.

Also Watch : சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

இதுவரை அரசியலுக்கு வந்த நடிகர்கள் சினிமாவை கையில் வைத்துக் கொண்டுதான் அரசியல் சேவை செய்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் எடுத்தது மிகவும் தைரியமான முடிவு. அவரது அடுத்தடுத்த செயல்பாடுகளை வைத்து தான் அவரது முடிவு தெரியவரும். கண்டிப்பாக அவரது கனவு நினைவாக வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் நல்லவர்களை தேர்வு செய்து மக்கள் வாக்களிக்க வேண்டும். யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது மக்களுக்கு தெரியும். இதற்கும் மேலாக பிரபஞ்ச சக்தி யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முடிவெடுக்கும்.

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

ஆறு முனை போட்டியாக இருந்தாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. யார் வெற்றி பெற்றாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும், பதற்றம் இன்றி இருக்க வேண்டும், நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

அமைச்சர் ரகுபதி பேச்சு:

மோடி திரும்ப வந்தால் இனி தேர்தல் கிடையாது எனவே பாசிச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்திய கூட்டணி கலத்தில் உள்ளது  

இன்று வருகின்ற செய்தி எல்லாம் மோடிக்கு 200க்கு குறைவான சீட்டுகளை கிடைக்கும் நமக்கு 300க்கும் மேற்பட்ட சீட்டுகள் கிடைக்கும் 

தலைவர் ஸ்டாலின் யாரை அடையாளம் காட்டுகிறார்களோ அவர்கள் தான் பிரதமராக முடியும்

நேரு உச்சி பிள்ளையார் போன்றவர் அவரது பார்வை பட்டால் போதும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பணம் வரும் சட்டம் சட்டத்துக்கு உட்பட்டு சட்டத்துறை செய்யும் என கூறினார் அதற்கு நேரு சட்டத்திற்கு உட்பட்டு செய்தால் சட்ட அமைச்சரே வேண்டாமே என வேடிக்கையாக கூறினார்

Also Watch : வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துகிறார்கள் உண்மையா ?

இறுதியாக ம.தி.மு.க முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான துரை வைகோ பேசுகையில்

அமைச்சர் கே.என். நேரு முகம் கடந்த மூன்று நாட்களாக இருக்கமாகவே இருந்தது. ஆனால் இன்று அவர் கடந்த இரண்டு மணி நேரங்களாக அவரும் கலகலப்பாக இருந்து எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மதிமுக திமுகவிலிருந்து வெளியே வந்தாலும் நாங்களும் திராவிட இயக்கத்தின் குடும்பம் தான். திராவிட இயக்கத்திற்கு ஏதாவது பிரச்சனை என்றால் முதலில் நிற்கக்கூடிய நபராக வைகோவும் இயக்கமாக மதிமுகவும் தான் இருக்கும்.

கலைஞரிடம் வைகோ உங்களுக்கு எப்படி உறுதுணையாக இருந்தாலும் அதே போல ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன் என கூறினார். தொடர்ந்து 7 ஆண்டுகளாக உறுதுணையாக இருந்து வருகிறார்.

எங்களுக்கு தொகுதியே ஒதுக்காவிட்டாலும் இந்த அணியில் தான் இருப்போம் என உறுதியாக கூறினேன்.

நான் அரசியல் வருவேன் என கனவில் கூட எதிர்பார்த்ததில்லை. என் தந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக என் கட்சிக்காரர்கள் வலுக்கட்டாயமாக என்னை இழுத்து விட்டார்கள் நான் ஒரு வேட்கையோடு அரசியலில் ஈடுபடவில்லை.

என் தந்தை ஒரு சகாப்தம் அவருக்கு தலைகுனிவு வந்து விடக்கூடாது என்பதற்காக தான் அரசியலுக்கு வந்தேன் என கண்ணீர் விட்டு அழுதார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை வேறு யாராவது நிற்க வையுங்கள் என கூறினேன்.

Also Watch : சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் நான் சுயமரியாதை காரன்.

மதவாத சக்திகள் திராவிட இயக்கத்தை அழித்துவிட்டு தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறார்கள் இந்த நேரத்தில் அதை எதிர்க்க தான் நாம் களத்தில் இருக்கிறோம். எங்களை யாரும் வற்புறுத்த வேண்டாம் புண்படுத்த வேண்டாம்.

இந்த தேர்தல் நீதிக்கும் அநீதிக்குமான போர் இதில் நீதி வெற்றி பெற வேண்டும் என்றார்.

செலவீரர்கள் கூட்டத்தில் திமுக, ம.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, ம.ம.க,உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended