• முகப்பு
  • இலங்கை
  • விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்30 நிமிட இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கினார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்30 நிமிட இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கினார்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 5, 2024, 5:47:44 AM

தரமற்ற தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க நேற்று (04) மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் 30 நிமிட இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கினார்.

Also Read : சிறப்பு நோயாளிகளுக்கான அம்சா மறுவாழ்வு இல்லம் திருச்சி காவேரி மருத்துவமனையில் திறப்பு

 அவரது விருப்பத்திற்கிணங்க மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க வழங்கிய இரகசிய வாக்குமூலம் நேற்று காலை 9.10 மணி முதல் 9.40 மணி வரை நீதவான் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.கடந்த 2ஆம் திகதி நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி குப்பிகளை சர்ச்சைக்குரிய வகையில் கொள்வனவு செய்தமை தொடர்பில் தனக்கு தெரிந்த முக்கிய தகவல்களை வெளியிட்ட மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க நேற்று இந்த இரகசிய அறிக்கையை வழங்கி இருந்தார்.

Also Read : ஹன்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்

இச்சம்பவம் தொடர்பில், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க, சுமார் 10 மணித்தியாலங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, இம்மாதம் முதலாம் திகதி வாக்குமூலங்களைப் பதிவுசெய்த பின்னர், அன்றிரவு 8.30 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

Also Read : அட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட புளியாவத்தை ஆ,த, வித்தியாலயத்தியில் நிகழ்வு

 தரமற்ற தடுப்பூசி குப்பிகளை கொள்வனவு செய்த சம்பவத்தில் 10ஆவது சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதான் உத்தரவிட்டார்.

Also Read : காசா மோதல்: இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்

VIDEOS

RELATED NEWS

Recommended