• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இலங்கை சிறையில் தவிக்கும் அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிருத்தம்.

இலங்கை சிறையில் தவிக்கும் அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிருத்தம்.

கார்மேகம்

UPDATED: Mar 24, 2024, 8:37:56 AM

இலங்கை சிறையில் தவிக்கும் அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்கக் கோரி‌ ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை  நிருத்த போராட்டத்தை தொடங்கினர்.

ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 52 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கைது செய்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைத்தனர்.

Also Watch : சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

இதைத் தவிர நாகை மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறையில் தவிக்கும் அனைத்து தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை‌‌ வலியுறுத்தியும் நேற்றுமுதல் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிருத்தந்தை தொடங்கினர்

இதனால் 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூர மிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்

Also Watch : வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துகிறார்கள் உண்மையா ?

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வேலை வாய்ப்பை‌ இழந்துள்ளனர்

அது போல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8- ந் தேதி அன்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைத்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க இருப்பதாகவும் ஏற்கனவே அறிவித்து‌ இருப்பது குறிப்பிட தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended