அனைத்துலகத் தாய் மொழி நாள் இலங்ஙை்கையிலும் நடத்தப்பட்டது
திருக்கோவில் - சுகுணதாஸ் சசிகுமார்
UPDATED: Feb 22, 2024, 1:27:33 AM
அனைத்துலகத் தாய் மொழி நாள் உலகம் எங்கிலும் கொண்டாடப்படும் நாளில் இலங்கைக் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை இவ்வருடம் (2024 பெப்ரவரி 21) 'எங்கள் வாழ்வை நாங்கள் பாடுகிறோம்' எனுந்தொனிப் பொருளில் நுண்கலைத்துறையில் இந்நாள் கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு நிகழ்ச்சியாக மட்டுநகரின் ஓய்வுநிலை அதிபரும் இலக்கியப் படைப்பாக்க ஆளுமையுமான திருமதி இந்திராணி புஸ்பராசா அவர்கள் மாண்பு செய்யப்பட்டுள்ளார்.
நுண்கலைத்துறையின் தலைவியான திருமதி துஸ்யந்தி சத்யஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதன்மை அதிதியாக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி வ.குணபாலசிங்கம் அவர்கள் பங்குபற்றியிருந்தார். இத்துடன் கலை கலாசார பீடத்தின் பேராசிரியர்களும், முதுநிலை விரிவுரையாளர்களும் பங்குபற்றி நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.
Also Read .பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
நுண்கலைத்துறையினைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர் சி.ஜெயசங்கர் அவர்களின் வழிப்படுத்துகையில் பாடல்களைப் பயின்று பாடி நிகழ்வின் தொனிப்பொருளை அர்த்தமுள்ளதாக்கினர்.