• முகப்பு
  • லஞ்சம்
  • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் லஞ்சம் பெற்ற சமூக நல விரிவாக்க அலுவலர்.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் லஞ்சம் பெற்ற சமூக நல விரிவாக்க அலுவலர்.

பரணி

UPDATED: Mar 6, 2024, 8:54:39 PM

செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பத்திரம் வழங்க லஞ்சம் வாங்கிய சமூக நல பாதுகாப்பு விரிவாக்க பெண் அலுவலர் ஜீவாவை லஞ்ச ஒழிப்பு போலீசார்  கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், கருங்காலிபாடி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ஜெயா(வயது 24) க/பெ கேசவன் இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து உள்ளது

Also Read : நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் கட்டாய கட்டண வசூலை தடுத்திட வேண்டும்.

ஒரு குழந்தை பெயர் சிந்தனை(4 வயது) இரண்டாவது குழந்தை கிருத்திகா இவர் அரசு மருத்துவ கல்லூரியில் பிரசவம் முடித்து மருத்துவரின் ஆலோசனைப்படி முதலமைச்சர் பெண்கள் பாதுகாப்பு திட்ட நிதிக்கான இரண்டு பெண் குழந்தைகள் பத்திரத்தை பெறுவதற்கு கடந்த 06.06.2022 ஆம் ஆண்டு அரசு சலுகை வேண்டி இ-சேவை மையத்தில் விண்ணப்பம் செய்து உள்ளார்‌.

இது குறித்து பலமுறை முயற்சித்தும் பயனாளி கே.ஜெயா அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சமூக நல விரிவாக்க அலுவலர் ஜீவா கிராமத்திற்கு விசாரணைக்கு வருவதாக சொல்லி அனுப்பியுள்ளார்.

Also Read : கன்னியாகுமரி ஆரல்வாய்மொழியில் ரயில் பாதை பணியினால் இறந்தவர் உடலை அடக்க செய்வதிலும் மக்கள் அவதி.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று சமூக நல விரிவாக்க அலுவலர் ஜீவா, பயனாளி ஜெயாவின் மாமனார் தொலைபேசிக்கு தொடர்புக் கொண்டு ஜெயாவை திங்கட்கிழமையன்று அலுவலகம் வருமாரு அறிவுறுத்தியுள்ளார். 

அவர் கூறியது போலவே கடந்த திங்கள்கிழமையன்று பயனாளி ஜெயா அவருடைய கணவர் கேசவன் ஆகிய இருவரும் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜீவாவை சந்தித்து ஆவணங்கள் அனைத்தும் கொடுத்து பத்திரம் எப்போது வரும் என்று கேட்கும் போது அவர் அலுவலக செலவுக்காக எனக்கு ரூபாய். 5000 கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

Also Read : காங்கிரஸ் ஓட்டை வாங்கியா ஜெயிச்ச? திமுக ஓட்டில்தான ஜெயிச்ச... மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவை சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நகராட்சி தலைவர்.

அதற்கு அவர்கள் நாங்கள் எளிமையான குடும்பத்தை சார்ந்தவர்கள் எங்களால் இவ்வளவு தொகை கொடுக்க இயலாது என்று சொல்லியதற்கு சமூக நல விரிவாக்க அலுவலர் ரூ. 3000 ஆயிரமாவது கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் அரசாங்கத்தின் இலவச திட்டம் தானே என்று கேட்டதற்கு இது எல்லாம் உனக்கு நல்லா தெரியும் பணம் மட்டும் கொடுக்க தெரியாதா என்று திட்டி அனுப்பி விட்டார்.

Also Read : திமுக கிளை செயலாளருமான தயாளன் என்பவரின் காதை கடித்து தனியாக எடுத்த தந்தை மகன்.

மனமுடைந்த பயனாளி ஜெயா மற்றும் அவரின் கணவர் கேசவன் ஆகிய இருவரும் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி திருவேல் முருகனிடம் புகார் மனுவை 05.03.2024 நேற்று மாலை 4 மணிக்கு கொடுக்க புகாரின் பேரில் அவரும் வழக்குப் பதிவுச் செய்து போலீஸார் அறிவுரைப்படி ரசாயன பவுடர் தடவியே ரூபாய் நோட்டுக்களை ஜெயாவிடம் கொடுத்து அனுப்பினர்.

Also Read : புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஆர்த்தியின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

இன்று மதியம் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் ஜீவா-விடம் பயனாளி ஜெயா பணத்தை கொடுக்க அவர் வாங்கி தன்னுடைய பரிசில் வைத்துக் கொண்ட பிறகு கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி தலைமையிலான இன்ஸ்பெக்டர் மைதிலி. மற்றும் போலீசார் ஜீவாவை பிடித்து கைது செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read : சமூக வலைத்தளங்களில் தமிழக அரசு வருங்கால தலைமுறைகளை சிதைக்கும் கொடுமை எனக் கூறிய  பாஜக பெண் நிர்வாகி சென்னையில் கைது.

VIDEOS

Recommended