• முகப்பு
  • ஆன்மீகம்
  • ஸ்ரீ பால முருகப்பெருமானுக்கு சுவாமி திருக்கோவிலில் 43 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி காவடி அபிஷேக உற்சவ திருவிழா.

ஸ்ரீ பால முருகப்பெருமானுக்கு சுவாமி திருக்கோவிலில் 43 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமி காவடி அபிஷேக உற்சவ திருவிழா.

வேல்முருகன்

UPDATED: Apr 24, 2024, 12:00:57 PM

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தட்டாத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பால முருகப்பெருமானுக்கு சித்ரா பௌர்ணமி முன்னிட்டு மாபெரும் சித்ரா பௌர்ணமி காவடிதிருவிழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு காவடி திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காப்பு கட்டி கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

ஸ்ரீ முருகப் பெருமானுக்கு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் பச்சை நிறம் ஆடை அணிந்த பக்தர்கள் 500 மேற்பட்ட உடையார்பாளையம் பெரியேரி கரையிலிருந்து.

பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து அலகு குத்தி உடையார்பாளையம் நகரத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்று நேர்த்திகடன் செலுத்தினர்.

 

VIDEOS

Recommended