• முகப்பு
  • ஆன்மீகம்
  • புவனகிரி அருகே சித்திரை  பௌர்ணமியை முன்னிட்டு கருப்பசாமி கோவிலில் படியளக்கும் பெருவிழா

புவனகிரி அருகே சித்திரை  பௌர்ணமியை முன்னிட்டு கருப்பசாமி கோவிலில் படியளக்கும் பெருவிழா

சண்முகம்

UPDATED: Apr 24, 2024, 5:32:41 AM

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் அமைந்துள்ளது விநாயகபுரம் கருப்பசாமி கோவில்.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு சித்திரை பௌர்ணமி விழாவை முன்னிட்டு படியளக்கும் பெருவிழா நடைபெற்றது. 

முன்னதாக கோவிலின் மூலவர் கருப்பசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்று வந்தன.

இதனையடுத்து கோவிலின் பூசாரி ஆறுமுகம் என்பவர் நள்ளிரவில் பல்லாயிரக்காண பக்தர்கள் முன்னிலையில் கத்தி மேல் நடந்து அருளாசிகளை வழங்கினார்.

இதன் பின்னர் மூலவர் பீடத்தின் அருகே கோவிலின் பூசாரி கிலோ கணக்கில் வைக்கப்பட்டிருந்த சில்லறை காசுகளில் இருந்து தனது கைகளால் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு அள்ளியள்ளி வழங்கினார்.

இதனை பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தந்து பல மணி நேரம் வரிசை கட்டி காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியோடு வாங்கிச் சென்றனர்.

இந்த சித்திரை பௌர்ணமி அன்று படியளக்கும் பெருவிழாவில் பெற்றுச்செல்லும் சில்லறை காசுகளை வைத்து குடும்பத்தில் வழிபடும் போது வற்றாத செல்வமும், குன்றாத வளமும் ஏற்படுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

முன் இரவில் இருந்து ஆரம்பித்து விடிய விடிய இந்த படியளக்கும் பெருவிழா நடைபெற்று வந்தது.

 

VIDEOS

Recommended