• முகப்பு
  • லஞ்சம்
  • மாற்றுத்திறனாளியிடம் ஸ்கூட்டர் வழங்க ரூ2000 லஞ்சம் வாங்கிய மாற்றுத்திறனாளிகள் அலுவலக ஊழியர் பிரபு.

மாற்றுத்திறனாளியிடம் ஸ்கூட்டர் வழங்க ரூ2000 லஞ்சம் வாங்கிய மாற்றுத்திறனாளிகள் அலுவலக ஊழியர் பிரபு.

மாரியப்பன்

UPDATED: Mar 12, 2024, 7:20:59 PM

பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளத்தை சேர்ந்தவர் ரவி.மாற்றுத்திறனாளியான இவர் ஸ்கூட்டர் கேட்டு பெரம்பலூர் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்த நிலையில் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து ஸ்கூட்டர் வழங்குவதற்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரபு என்பவர் ரூ2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

Also Watch : இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளை செயல் இழக்க வைக்கும் அக்னி 5

லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவி இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி ரவி,ரசாயணம் தடவிய நோட்டுகளுடன் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சென்று மாற்றுத்திறனாளிகள் அலுவலக ஊழியர் பிரபுவிடம் லஞ்சம் கொடுத்துள்ளார்.

Also Read : தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்

அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீஸார் திடிரென மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து அலுவலக ஊழியர் பிரபுவை கையும் களவுமாக கைது செய்தனர்.

Also Read : தருமபுரம் ஆதீன வீடியோ விவகாரத்தில் ஆதீன நிர்வாகத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை

கைது செய்யப்பட்ட பிரபு அரியலுர் மாவட்டம் குறிச்சி பகுதியை சார்ந்தவர் என்றும் தஞ்சாவூரில் பணிபுரிந்து அண்மையில்தான் பெரம்பலூருக்கு மாற்றலாகி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Also Read : அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி கள நிலவரம்

ரூ2000 லஞ்சம் வாங்கிய பிரபு கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் பிற அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

VIDEOS

Recommended