பல இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் மீட்ப்பு

ஏ. என். எம். முஸ்பிக்

UPDATED: May 1, 2024, 3:50:20 PM

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றப்பட்டுள்ளன.

கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில் பீடி இலைகளை புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக புத்தளம் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று புத்தளம் பிராந்திய பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது சுமார் 39 உரைகளில் 1230 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதாகவும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியென மதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாமென்று சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

  • 3

VIDEOS

Recommended