(கோடைகால மருத்துவம்) ஊற வைத்த உலர் திராட்சை நீரின் 6 நன்மைகள்:

பரணி

UPDATED: May 1, 2024, 5:28:06 AM

உலர் திராட்சையில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நுண் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. முக்கியமாக உலர் திராட்சையை ஊற வைத்த நீரில் உள்ள குளிர்ச்சி பண்புகள் கோடையில் உடல் வறண்டு போவதைத் தடுக்கிரது.

மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிக்கவும் உதவுகின்றது.

திராட்சையில் இயற்கை சர்க்கரை தேவையான அளவில் இருப்பதால், இவற்றை உட்கொள்ளும் போது ,உடலுக்கு உடனடி ஆற்றல் அளிக்கின்றது.

மேலும் உலர் திராட்சையில் கொழுப்பு மற்றும் சோடியம் சத்துக்கள் குறைவு. நார்ச்சத்து அதிகமான அளவில் இருப்பதால், செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும். எனவே கோடையில் உலர் திராட்சை ஊற வைத்த நீரைக் குடிப்பது நல்லது. 

உலர் திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்நீருடன் உலர் திராட்சையை உட்கொள்ளும் போது, முழு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கிறது , மேலும் எளிதில் நம் உடலால் உறிஞ்சப்படுகிறது.

இதனால் நோயெதிர்ப்பு சக்தியும் வலுவடைகிறது. இந்த கோடையில் உலர் திராட்சையை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, அது வெப்பத்தால் உடல் வறண்டு போவதைத் தடுத்து, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

எனவே கோடையில் உடல் வறண்டு போகாமல் இருக்க ,உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து, அந்நீரை குடித்து வருவது நல்லது.

உடலின் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டால் போதும் , ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, முதலில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.

அதற்கு உலர் திராட்சை ஊற வைத்த நீர், பெரிதும் உதவி புரியும்.உலர் திராட்சை ஊற வைத்த நீரை தினமும் அருந்தி வர மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கறது.

உடல் குளிர்ச்சியாகும் முக்கியமாக உலர் திராட்சை ஊற வைத்த நீரை ஒரு தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

எனவே உடல் சூடு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், இந்த நீரை குடித்து வாருங்கள். இது நல்ல பலனைப் அளிக்கும்.

 

VIDEOS

Recommended