• முகப்பு
  • விவசாயம்
  • ஆண்டிபட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி  விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டம் என புலம்பல்.

ஆண்டிபட்டி பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி  விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டம் என புலம்பல்.

ராஜா

UPDATED: May 1, 2024, 1:48:59 PM

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கணேசபுரம் பகுதியில் தக்காளி பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றார்கள் கடந்தாண்டு தக்காளி பெட்டிக்கு 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது வெறும் ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து வருவதாலும் கிணற்றுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாலும் விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை ஒருபுறம் மிகவும் கஷ்டப்பட்டு சொட்டு நீர் பாசனம் அமைத்து செடிகளை காப்பாற்றி வரும் விவசாயிகளுக்கு கோடை வெப்பத்தின் காரணமாக செடிகளிலேயே தக்காளி வெம்பி பழுத்து விடுகிறது நிறம் மாறி இருப்பதால் வியாபாரிகள் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை தான் கேட்கிறார்கள்.

மேலும் கோடை வெயிலுக்கு பகிர்ந்து கொண்டு தக்காளி எடுப்பதற்கு கூலி ஆட்கள் வேலைக்கு வருவதும் இல்லை ஆகையால் வீட்டில் உள்ளவர்களே தக்காளியை பறித்து விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.

தக்காளி நாற்று பயிரிடப்படும் போது ரூபாய் 80 க்கு பெட்டி விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தது தற்போது பெட்டிக்கு 100ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

கூலி ஆட்களுக்கு ஒரு நாளைக்கு 250 ரூபாய் சம்பளம் கொடுத்து முறையாக பராமரிப்பு செய்து மருந்துகள் அடித்து சொட்டுநீர் பாசனம் அமைத்து விளைச்சலுக்கு தக்காளியை கொண்டு வந்தால் லாபம் ஒன்றும் இல்லை செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் பெரிய அளவில் ஏக்கருக்கு நஷ்டம் ஏற்படுகிறது. 

மேலும் விவசாயிகளுக்கு தக்காளி மட்டுமல்லாது அனைத்து விவசாய பொருட்களுக்கும் ஆதார விலை நிர்ணயிக்காத வரை விவசாயிகளின் கஷ்டங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

எப்போதாவது லாட்டரி சீட்டு விழுந்தார் போல் ஒரு முறை விலை ஏற்றம் ஆகும் மற்ற நேரங்களில் கை நஷ்டம் தான் வேறு தொழில்கள் செய்ய மனமில்லாமல் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறோம் என கணேசபுரம் விவசாயி தெரிவித்தார்.

கடந்தாண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு தக்காளி பயிர் செய்ததில் பெரிய அளவில் நஷ்டம் தான் ஏற்படும் என தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended