• முகப்பு
  • கல்வி
  • யோகா போட்டி: நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

யோகா போட்டி: நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

சாம் பென்னட்

UPDATED: Apr 21, 2024, 7:16:09 PM

மாநில அளவிலான யோகா போட்டியில் ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். ஈரோடு யோகா அசோசியேஷன் சார்பில் 14 வயதிற்குள்பட்ட மாண வர்களுக்கு மாநில அளவிலான யோகா போட்டி கோபியில் அண்மை யில் நடைபெற்றது.

இதில், ஈரோடு நந்தா சென்ட்ரல் மெயின் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்கள் உள்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1, 000 மாண வர்கள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட் டிக்கு இப்பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள் தகுதி பெற்றனர்.

இறுதிப் போட்டியின் முடிவில் 10 மாணவர்கள் முதல் இடத்தினையும், 8 மாணவர்கள் இரண்டாம் இடத்தினையும் மற்றும் 7 மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர். 

சிறப்பிடம் பெற்ற மாண வர்களுக்கு பள்ளியின் முதல்வர்கள் பிரகாஷ் நாயர், ராஜேஷ் ஆகி யோர் பரிசு வழங்கி பாராட்டினர்

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை யின் தலைவர் வி. சண்முகன், செயலர் எஸ். நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி எஸ். ஆறுமுகம், நிர்வாக அதிகாரி மனோகரன் மற்றும் யோகா ஆசிரியர் ஆறுமுகவேல் ஆகி யோர் மாணவர்களைப் பாராட்டினர்.

 

VIDEOS

Recommended