• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஓய்வு பெற்ற சீனியர் சிட்டிசன்கள் வசிக்கும் செரீன் க்ஷேத்ரா பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத கொலம்பியா பசிபிக் கம்யூனிட்டியை கண்டித்து ஆர்ப்பாட்டம். 

ஓய்வு பெற்ற சீனியர் சிட்டிசன்கள் வசிக்கும் செரீன் க்ஷேத்ரா பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத கொலம்பியா பசிபிக் கம்யூனிட்டியை கண்டித்து ஆர்ப்பாட்டம். 

லட்சுமி காந்த்

UPDATED: May 3, 2024, 12:03:15 PM

பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வரும் செரீன் க்ஷேத்ரா என்ற கட்டுமான நிர்வாகம் , காஞ்சிபுரம் , வண்டலூர், வேலூர், பாண்டிச்சேரி, கோயம்புத்தூர் போன்ற பகுதிகளிலும் கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் , சீனியர் சிட்டிசன்கள் மகிழ்ச்சியாக வசிக்கும் வகையில் தனித்தனி நவீன குடியிருப்புக்களை கட்டி சுமார் 50 லட்சம் ரூபாய் முதல் 65 லட்ச ரூபாய் வரையில், விற்பனை செய்து வருகிறார்கள். 

குடியிருப்புகள் விற்பனை செய்யும்போது அடிப்படை வசதிகள் மருத்துவம், பாதுகாப்பு ,சுகாதாரம் ,சர்வீஸ் போன்ற அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சீனியர் சிட்டிசன் என்கின்ற வீட்டு உரிமையாளர்களிடமும் மூன்றிலிருந்து ஆறு லட்ச ரூபாய் பணத்தை டெபாசிட் ஆக பெற்றுள்ளார்கள்,  

காஞ்சிபுரம் நத்தப்பேட்டை பகுதியில் உள்ள செரீன் க்ஷேத்ரா நிர்வாகத்திடம் சீனியர் சிட்டிசன்கள் கொடுத்த டெபாசிட் தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது சுமார் 10 கோடி ரூபாய் வரை உள்ளதாக சீனியர் சிட்டிசன் உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.

தற்போது செரீன் க்ஷேத்ராவின் கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் நத்தப்பேட்டை சீனியர் சிட்டிசன்கள் குடியிருப்புப் பகுதியில் இருந்த பொதுப் பகுதிகளையும் மற்றும் பராமரிப்பு பொறுப்பு என அனைத்தையும் வெளிநாட்டு கம்பெனியான கொலம்பியா பசிபிக் கம்யூனிடிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திடம் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த வீடுகளை வாங்கிய சீனியர் சிட்டிசன்களுக்கு , "அடுக்கு இருக்கை அரங்கம் எனப்படும் ஆம்பி தியேட்டர், உணவருந்தக் கூடிய வசதியுடன் பிரத்யேக சமுதாயக்கூடம், ஆயுர்வேத மருத்துவ வசதி , சூரியசக்தி வாட்டர் ஹீட்டர், T1 வரிசை குடியிருப்புக்கு பின்னால் மேம்படுத்திய நிலப்பரப்பு, நடமாடும் வாகனச்சேவை, குழாய்கள் மூலம் குடித்தண்ணீர் வசதி சேதம் அடைந்த இடத்தில் முழு காம்பௌண்ட் கட்டித்தருதல் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் என அனைத்து வசதிகளையும் உடனே செய்து தருவதாக நிர்வாகம் கூறி இருந்த நிலையில்,

பதிவு செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர்களின் (SKOA) சங்கத்தால் மட்டுமே பராமரிப்பு பணி செய்பவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அதிகப்படியான வைப்புத்தொகை (TN RERA விதிகளை மீறி அதிகப்படியான பணம் உரிமையாளர்களிடமிருந்து வசூலித்துள்ளனர்.)

மற்றும் அதிகப்படியான பராமரிப்புக் கட்டணங்களை வசூலிக்க தடை செய்தும் , பராமரிப்பு செலவுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும், பராமரிப்பு செலவினங்களுக்கான பில்லில் உரிமையாளர்களின் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையின் மீதான வட்டி , பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர்களின் சங்கத்திற்கு அலுவலக இடத்தை வழங்குதல்,

பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர்களின் சங்கத்தின் ஆலோசனைகளை பெற்று செயல்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் தமிழக அரசாணை 83 வலியுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஓய்வுபெற்ற முதியோர்களுக்கான சொகுசு வீடுகள் 175 உள்ளது. காஞ்சிபுரத்தின் மையப் பகுதியிலிருந்து சுமார் 7கிலோமீட்டர் தொலைவில் புற வட்டச்சாலையில் இந்த டவுன்ஷிப் அமைந்துள்ளது.

போக்குவரத்து குறைந்த, ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த குடியிருப்புகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும், சீப் செகட்டரி முதல் ஓய்வுபெற்ற ஏராளமானோர் வசிக்கும் இந்த சொகுசு குடியிருப்பில் சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் இதற்குள் புகுந்து சமூக விரோத செயல்களை செய்வதால் எங்களுக்குரிய பாதுகாப்பு இல்லை என கூறி சீனியர் சிட்டிசன்கள் அச்சப்படுகின்றார்கள்

மேலும் ஹவுஸ் கீப்பிங் , கழிவறை சுத்தம் செய்ய, மூன்று வேளையும் உணவு எனக் கூறி இதற்காக மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் வசூலிக்கின்றார்கள். எங்களைப் போன்ற சீனியர் சிட்டிசன்கள் தரம் அற்ற உணவை உண்ண முடியுமா? உணவில் ஒரு நாள் கரப்பான் பூச்சி இருந்தது. இன்னொரு நாள் இட்லியில் வண்டு இருந்தது. இப்படி கொடுத்தால் எங்களுக்கு அஜிரண கோளாறு ஏற்படாதா எனக் கேட்கின்றனர்.

நாங்கள் குடியிருப்புகள் வாங்கும்போது ஏராளமான வாக்குறுதிகள் அளித்தார்கள். அளித்தபடி இதுவரையில் ஏதும் செய்யவில்லை. இங்கு அரசு உத்தியோகத்தில் உயர் பதவியில் வகித்தவர்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர்.

ஓய்வு பெற்ற பின்னர் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என எண்ணி தான் சீனியர் சிட்டிசன்கள் இது போன்ற குடியிருப்புகளை அம்பது லட்சம் முதல் 65 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து வாங்குகிறார்கள். இந்த குடியிருப்புகளை நம்பி வந்து மிகவும் அவதிப்படுகின்றோம் இன புலம்புகின்றார்கள்.

வண்டலூரில் உள்ள செரீன் ஆதிநாத், கோவையில் உள்ள செரீன் இடிகரை & ரோஸ், செரீன் பெலிகன் மற்றும் பெங்களூரில் உள்ள செரீன் அர்பனா ஆகிய குடியிருப்பு வளாகங்களில், கொலம்பியா பசிபிக் கம்யூனிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனங்கள் மீது ஓய்வுபெற்ற உரிமையாளர்களால் பதிவு செய்யப்பட்ட செரீன் க்ஷேத்ரா உரிமையாளர்கள் சங்கம் (SKOA) உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட இந்த பிரச்சனைகள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை அதேபோல சமூக நலத்துறையும்ம் நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

எனவே தான் செரீன் க்ஷேத்ரா மற்றும் கொலம்பியா பசிபிக் கம்யூனிட்டிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனங்களை கண்டித்து சீனியர் சிட்டிசன்கள் ஏராளமானோர் குடியிருப்பு ஆர்ச் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் செய்தோம் .

மத்திய மாநில அரசுகளும் மாவட்ட நிர்வாகமும் முறையான விசாரணையை மேற்கொண்டால் *இந்த நிறுவனங்கள் செய்கின்ற முறைகேடுகள்* வெளி உலகத்துக்கு தெரிய வரும் என சீனியர் சிட்டிசன்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

முன்னதாக வீட்டு உரிமையாளர் சங்கத்தின் (SKOA ) செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளையும் முறையாக தீர்மானம் இயற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended